திமுகவுக்கு வாக்களித்தால் வாரிசுகளுக்கே பலன்- பிரதமர் மோடி
ஊழல்கள் பிடிபட்டதால் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பாஜகவை எதிர்க்கின்றன என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
போபாலில் நடைபெற்ற பாஜக கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, “ஒரு நாட்டில் எப்படி 2 சட்டம் இயங்க முடியும். அரசியலமைப்பு சட்டம் சமத்துவத்தை வலியுறுத்துகிறது. உச்சநீதிமன்றம் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த சொல்கிறது. ஆனால் எதிர்க்கட்சிகள் வாக்கு வங்கி அரசியலுக்காக இதனை எதிர்க்கின்றன. எதிர்கட்சிகள் பொது சிவில் சட்டத்தை எதிர்த்து பேசுகின்றனர். பொது சிவில் சட்டத்திற்கு அனைவரும் தங்களுடைய ஆதரவை அளிக்க வேண்டும்.
ஊழல்கள் பிடிபட்டதால் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பாஜகவை எதிர்க்கின்றன. ஊழல் செய்தவர்களை விடமாட்டோம். அவர்கள் சிறை செல்ல நேரிடும். திமுகவுக்கு வாக்களித்தால் வாரிசுகளுக்கே பலன். 2024 ஆம் ஆண்டு பாஜகவை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவர நாட்டு மக்கள் முடிவெடுத்துவிட்டார்கள். 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக மீண்டுமொரு முறை மிகப்பெரிய வெற்றியை பெறுவது உறுதி. அதனால்தான் எல்லா எதிர்க்கட்சிகளும் பதற்றத்தில் உள்ளன.


திமுகவுக்கு வாக்களித்தால் கருணாநிதியின் பிள்ளைகள், பேரப் பிள்ளைகள் மட்டுமே பலனடைவார்கள். காங்கிரஸ்க்கு வாக்களித்தால் காந்தி குடும்பம் மட்டுமே பலனடையும். எதிர்க்கட்சிகளின் வாரிசு அரசியல் நாட்டுக்கு உகந்ததல்ல. நாட்டு நலனுக்காகவும், சந்ததிகள் முன்னேற்றத்திற்கும் மக்கள் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும்” என்றார்.


