
நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர், வரும் ஜூலை 20- ஆம் தேதி அன்று தொடங்கவுள்ளதாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அறிவித்துள்ளார்.

நீலகிரியில் சினிமா ஷூட்டிங்கிற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்
டெல்லியில் உள்ள புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் வரும் ஜூலை 20- ஆம் தேதி அன்று காலை 10.00 மணிக்கு தொடங்கும் மழைக்காலக் கூட்டத்தொடர், வரும் ஆகஸ்ட் மாதம் 11- ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தொடரில், டிஜிட்டல் தொடர்பான தனிநபர் தகவல் பாதுகாப்பு உள்ளிட்ட பல மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசுத் திட்டமிட்டுள்ளது.
அதேபோல், மணிப்பூர் மாநிலத்தில் நீடிக்கும் கலவரம், வேலை வாய்ப்பு, பொருளாதாரம், மத்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ள வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை சோதனைகள் உள்ளிட்ட விவரங்களை எழுப்ப காங்கிரஸ், தி.மு.க., இடதுசாரிகள், திரிணாமூல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளனர்.
வணிக நிறுவனங்களுக்கு மின்கட்டண உயர்வு அமல்!
அடுத்தாண்டு நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்த மழைக்காலக் கூட்டத்தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.