spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாநீட் மறுதேர்வு நடத்தப்படாது - உச்சநீதிமன்றம் திட்டவட்டம்

நீட் மறுதேர்வு நடத்தப்படாது – உச்சநீதிமன்றம் திட்டவட்டம்

-

- Advertisement -

நீட் மறுதேர்வு நடத்தப்படாது - உச்சநீதிமன்றம் திட்டவட்டம்

”நீட் வினாத்தாள் கசிவால் ஒட்டுமொத்த மாணவர்களும் பாதிக்கப்பட்டது உறுதியானால் மட்டுமே மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியும். எனவே மறுதேர்வு நடத்தப்படாது” என உச்சநீதிமன்றம் கூறியது.

we-r-hiring

நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு போன்ற பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக புகார்கள் எழுந்தன. இது குறித்து சுமார் 254 மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவை அனைத்தையும் ஒருங்கிணைத்து உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்து வந்தது. அப்போது சென்னை ஐஐடி சார்பில் நீட் தேர்வு முறைகேடு குறித்த விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. விசாரணையின் ஒரு பகுதியை வெளியிட வேண்டும் என மனுதாரர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதற்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏற்க மறுத்தனர்.

மேலும் விசாரணையின்போது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் கூறுகையில், ”சமூக சீர்கேடுகள் தொடர்பான விவகாரம் என்பதால் நீட் தேர்வுக்கு இந்த நீதிமன்றம் முக்கியத்துவம் வழங்குகிறது. லட்சக்கணக்கான மாணவர்கள் இன்றைய வழக்கு விசாரணைக்காக காத்திருக்கிறார்கள். நீட் தேர்வில் குளறுபடி புகார் எழுந்துள்ளதால், கடந்த மாதம் வெளியான நீட் தேர்வு முடிவுகளை ரத்து செய்யவும் முடியாது; அனைத்து மாணவர்களும் மறு தேர்வை எழுத வேண்டும் என உத்தரவிடவும் முடியாது” என்று தெரிவித்தார்.

நாளை ஓடிடியில் வெளியாகும் விதார்த்தின் ‘அஞ்சாமை’!

மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிடும் போது, ”ஒட்டுமொத்த நபர்களுக்கும் நீட் தேர்வை நடத்த வேண்டும் என நாங்கள் கேட்கவில்லை சுமார் ஒரு லட்சத்து 8 ஆயிரம் மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று அவர்கள் மருத்துவ படிப்புகளில் சேர இருக்கிறார்கள் அவர்களுக்கு மட்டும் மறுத்தேர்வு நடத்தினால் போதும் என்று தான் கேட்கிறோம்” . அப்போது குறுக்கிட்ட சந்திரசூட், ”வினாத்தாள் கசிவால் ஒட்டுமொத்த மாணவர்களும் பாதிக்கப்பட்டது உறுதியானால் மட்டுமே மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியும்” எனக் கூறி இருக்கிறார்.

MUST READ