Homeசெய்திகள்இந்தியாஅத்துமீறிய நபர்களை எம்.பி.க்களே மடக்கிப் பிடித்தனர்!

அத்துமீறிய நபர்களை எம்.பி.க்களே மடக்கிப் பிடித்தனர்!

-

 

நாடாளுமன்றத்தில் தீவிர சோதனை! மக்களவையில் இருவர் அத்துமீறிய நிலையில் நாடாளுமன்றத்தில் தீவிர சோதனை நடைபெற்று வருகிறது. நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், இன்று (டிச.13) மக்களவையில் பார்வையாளர்கள் மாடத்தில் இருந்த இரண்டு பேர் திடீரென மாடத்தில் இருந்து குதித்து மேஜை மீது தாவி ஓடிய நபர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மக்களவையில் நுழைந்த இருவரும் ‘சர்வாதிகாரம் கூடாது’ என முழக்கமிட்டதால் அவையில் பரபரப்பு நிலவியது. மக்களவையில் பாதுகாப்பு வளையங்களை மீறி நடந்த சம்பவத்தையடுத்து, நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது. உள்ளே நுழைந்த இருவரும் தங்கள் காலணியில் மறைத்து வைத்திருந்த கண்ணீர் புகை குண்டுகளை வீசியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மக்களவை பார்வையாளர் மாடத்தில் இருந்து குதித்து மேஜை மீது ஓடிய நபர்களை சக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மடக்கிப் பிடித்தனர். நாடாளுமன்றத்தில் இருவர் அத்துமீறிய நேரத்தில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் அவையில் இல்லை. அதேபோல், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி அவைக்கு வருவதற்கு சில நிமிடங்களுக்கு முன் சம்பவம் நடந்துள்ளது. நாடாளுமன்றத்தின் வெளியே வண்ணத்தை உமிழும் பொருளுடன் போராட்டம் நடத்தி இரண்டு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட நான்கு பேரிடம் பாதுகாப்புப் படையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மக்களவையில் இருவர் அத்துமீறிய நிலையில், நாடாளுமன்றத்தில் தீவிர சோதனை நடைபெற்று வருகிறது. நாடாளுமன்றத்துக்கு செல்லும் சாலைகளை மூடி டெல்லி காவல்துறை தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
Photo: SANSAD TV

மக்களவையில் இருவர் அத்துமீறிய நிலையில் நாடாளுமன்றத்தில் தீவிர சோதனை நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் டிச.19- ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!

நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், இன்று (டிச.13) மக்களவையில் பார்வையாளர்கள் மாடத்தில் இருந்த இரண்டு பேர் திடீரென மாடத்தில் இருந்து குதித்து மேஜை மீது தாவி ஓடிய நபர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மக்களவையில் நுழைந்த இருவரும் ‘சர்வாதிகாரம் கூடாது’ என முழக்கமிட்டதால் அவையில் பரபரப்பு நிலவியது.

மக்களவையில் பாதுகாப்பு வளையங்களை மீறி நடந்த சம்பவத்தையடுத்து, நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது. உள்ளே நுழைந்த இருவரும் தங்கள் காலணியில் மறைத்து வைத்திருந்த கண்ணீர் புகை குண்டுகளை வீசியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மக்களவை பார்வையாளர் மாடத்தில் இருந்து குதித்து மேஜை மீது ஓடிய நபர்களை சக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மடக்கிப் பிடித்தனர்.

நாடாளுமன்றத்தில் இருவர் அத்துமீறிய நேரத்தில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் அவையில் இல்லை. அதேபோல், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி அவைக்கு வருவதற்கு சில நிமிடங்களுக்கு முன் சம்பவம் நடந்துள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநர் அழைப்பு!

நாடாளுமன்றத்தின் வெளியே வண்ணத்தை உமிழும் பொருளுடன் போராட்டம் நடத்தி இரண்டு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட நான்கு பேரிடம் பாதுகாப்புப் படையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மக்களவையில் இருவர் அத்துமீறிய நிலையில், நாடாளுமன்றத்தில் தீவிர சோதனை நடைபெற்று வருகிறது. நாடாளுமன்றத்துக்கு செல்லும் சாலைகளை மூடி டெல்லி காவல்துறை தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

MUST READ