Homeசெய்திகள்இந்தியா4-வது நாளாக நாடாளுமன்றம் முடங்கியது

4-வது நாளாக நாடாளுமன்றம் முடங்கியது

-

4-வது நாளாக நாடாளுமன்றம் முடங்கியது

ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகளின் முழக்கத்தால் 4-வது நாளாக நாடாளுமன்றம் முடங்கியது.

parliament

நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வலியுறுத்தி ஆளுங்கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றம் முடங்கியது. இதேபோல் அதானி குழும முறைகேடுகள் தொடர்பாக விசாரிக்கக்கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கமிட்டனர்.

பாஜக திட்டமிட்டு நாடாளுமன்றத்தை முடக்குவதாக காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டினர். மேலும் அதானி விவகாரத்தை மறைப்பதற்காக ஆளுங்கட்சியினர் நாடாளுமன்றத்தை முடக்குவதாகவும் தெரிவித்தனர். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தங்கள் இருக்கைகளை விட்டு வெளியேறி அவைத்தலைவர் இருக்கை அருகே சென்று முழக்கமிட்டனர். நாடாளுமன்றம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஏற்கெனவே கடந்த 3 நாட்களாக விவாதம் எதுவும் நடக்காமல் நாடாளுமன்றம் முடங்கியிருந்தது.

எதிர்க்கட்சி தலைவர்களை நாடாளுமன்றத்தில் பேச அனுமதிக்காததை கண்டித்து நாடாளுமன்ற வளாக காந்தி சிலை முன்பு எதிர்க்கட்சி எம்.பிக்கள் மனித சங்கிலி ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். இதனிடையே நாடாளுமன்ற வளாகத்தில் மூத்த மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். ராஜ்நாத் சிங், பியூஷ் கோயல், அனுராக் தாகூர், கிரண் ரிஜுஜு, பிரகலாத் ஜோஷி உள்ளிட்டோருடன் மோடி ஆலோசனை நடத்தினார்.

 

MUST READ