- Advertisement -
ராஜஸ்தானை காங்கிரஸ் ஆட்சி அழித்துவிட்டது- பிரதமர் மோடி
கடந்த 5 ஆண்டுகளில் ராஜஸ்தானை காங்கிரஸ் ஆட்சி அழித்துவிட்டதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் சித்தோர்கரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, ராஜஸ்தானை சூறையாடுவதில் காங்கிரஸ் எதையும் விட்டு வைக்கவில்லை. குற்றங்கள் தொடர்பான பட்டியலில் ராஜஸ்தான் மாநிலம் முதலிடத்தில் இருப்பது வேதனை அளிக்கிறது. ராஜஸ்தானில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக அதிகளவில் வழக்குகள் பதிவாகியுள்ளன. கடந்த 5 ஆண்டுகளில் ராஜஸ்டானை காங்கிரஸ் ஆட்சி அழித்துவிட்டது.
ராஜஸ்தானில் பாஜக ஆட்சிக்கு வரும் என பகிரங்கமாக முதல்வர் கெலாட் பகிரங்கமாக ஏற்றுக்கொண்டுள்ளார். ராஜஸ்தானில் பாஜக ஆட்சி அமைந்தபின் தனது ஆட்சிக்கால திட்டங்களை நிறுத்தக்கூடாது என கேட்டுக்கொண்டுள்ளார். ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சிக்கு பிரியாவிடைக்கான கவுன்ட்டவுன் தொடங்கியுள்ளதை கெலாட் அறிவார்” என்றார்.