ராகுலின் குரலை மோடி நசுக்கப் பார்க்கிறார் – பிரியங்கா காந்தி
அவதூறு வழக்கில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கும் சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.
2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால் ராகுல்காந்தியின் எம்.பி பதவி பறிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
அந்தவகையில் ராகுல்காந்தி மீது பொய் வழக்குகள் போட்டு தகுதி நீக்கம் செய்து ஜனநாயகத்தின் மீது தாக்குதல் நடத்தியதை எதிர்த்து டெல்லி ராஜ் கட்டில் பிரியங்கா காந்தி சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டார். இப்போராட்டத்தில் மல்லிகார்ஜுன கார்கே, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

போராட்டத்துக்கு மத்தியில் செய்தியாளர்களிடம் பேசிய பிரியங்கா காந்தி, “ராகுல்காந்தியின் குரலை நசுக்கப் பார்க்கிறார். அவரை சிறையில் தள்ளப் பார்க்கிறார். உங்களால் அவ்வளவு தான் செய்ய முடியும் ஆனால் இதற்கெல்லாம் அஞ்சக்கூடியவர் என் சகோதரர் அல்ல. பிரதமர் மோடி, பிரதமர் மோடியும் பாஜக தலைவர்களும் எனது தாயை பல தருணங்களில் அவமானப்படுத்தியுள்ளனர். எங்கள் குடும்பத்தை வாரிசு அரசியல் என்று சொல்லும் நரேந்திர மோடி அவர்களே, இந்த நாட்டின் ஜனநாயகம் எங்கள் குடும்பத்தின் இரத்ததால் எழுதப்பட்டது. எங்கள் குடும்பம் இரத்தத்தால் இந்தியாவின் ஜனநாயகத்தை வளர்த்துள்ளது . எங்கள் நரம்புகளில் ஓடும் இந்த இரத்தத்திற்கு ஒரு சிறப்பு உண்டு. உங்களை போன்ற கோழைகளின் முன் அடி பணியாது. இந்தியாவில் இருந்து ஜனநாயகத்தை ஒழிக்க பாஜக நினைக்கிறது” என்றார்.


