புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பாரதிய ஜனதா கட்சியின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர்களைத் தேர்வு செய்ய, பாரதிய ஜனதா கட்சியின் மத்திய தேர்தல் குழு கூட்டம் கடந்த மார்ச் 18-ஆம் தேதி நடைபெற்றது. நிதின் நவீன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில், புதுச்சேரியின் 9 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

வேட்பாளர்கள் மற்றும் தொகுதிகள்:
மண்ணாடிப்பட்டு, திரு. ஏ. நமச்சிவாயம்
ஊசுடு (தனி), திரு. இ. தீப்பாய்ந்தான்
காலாப்பட்டு, திரு. பி.எம்.எல். கல்யாணசுந்தரம்
ராஜ் பவன், திரு. வி.பி. ராமலிங்கம்
முதலியார்பேட்டை, திரு. ஏ. ஜான்குமார்
மணவெளி, திரு. ஏம்பலம் ஆர். செல்வம்
திருநள்ளாறு, திரு. ஜி.என்.எஸ். ராஜசேகரன்
நிரவி, டி.ஆர். பட்டினம் டி.கே.எஸ்.எம். மீனாட்சிசுந்தரம்
மாஹே, திரு. ஏ. தினேஷன்
பாஜகவின் முக்கிய முகமான நமச்சிவாயம் மண்ணாடிப்பட்டு தொகுதியிலும், சட்டப்பேரவைத் தலைவர் ஏம்பலம் செல்வம் மணவெளி தொகுதியிலும் மீண்டும் களம் காண்கின்றனர். வேட்பாளர் பட்டியல் வெளியானதைத் தொடர்ந்து, புதுச்சேரி அரசியல் களம் தற்போது சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
அகில இந்திய பொதுச் செயலாளர் பேபியை மரியாதை நிமித்தமாக சந்தித்தார் வைகோ
