spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாபுதுச்சேரியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் போட்டி?

புதுச்சேரியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் போட்டி?

-

- Advertisement -

 

இவ்வளவுதான்.... இந்தியாவை இரண்டு பேர் விற்கிறார்கள் இரண்டு பேர் வாங்குகிறார்கள்- வெங்கடேசன் எம்.பி. ஆவேசம்.

we-r-hiring

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் புதுச்சேரியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முதலமைச்சர் வழங்கிய நலத்திட்ட ஆணையை மேடையிலேயே திருப்பிக் கொடுத்த நபர்!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் புதுச்சேரி தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணியில் உள்ள பா.ஜ.க. போட்டியிடுகிறது. இந்த சூழலில், பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளரை இறுதிச் செய்வதற்காக புதுச்சேரி வந்துள்ள மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, புதுச்சேரி மாநில பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளர் ஆகியோர் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான என்.ஆர்.ரங்கசாமியைச் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர்.

ரமலான் நோன்புக்கு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு பச்சரி வழங்க முதலமைச்சர் உத்தரவு

இதனிடையே, புதுச்சேரி தொகுதியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் போட்டியிடவுள்ளதாக பா.ஜ.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, அம்மாநில ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் போட்டியிடுவார் எனக் கூறப்பட்ட நிலையில், தற்போது இந்த தகவல் வெளியாகியுள்ளது.

MUST READ