Homeசெய்திகள்இந்தியா"எனக்கு சிறந்த ஆசிரியர்களில் ஒருவர் எனது தந்தை"- ராகுல் காந்தி உருக்கம்!

“எனக்கு சிறந்த ஆசிரியர்களில் ஒருவர் எனது தந்தை”- ராகுல் காந்தி உருக்கம்!

-

 

"எனக்கு சிறந்த ஆசிரியர்களில் ஒருவர் எனது தந்தை"- ராகுல் காந்தி உருக்கம்!
Photo: ANI

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 79ஆவது பிறந்தநாளையொட்டி, டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, மல்லிகார்ஜூன கார்கே ஆகியோர் மலர்வளையம் வைத்தும், மலர்தூவியும் மரியாதைச் செலுத்தினர்.

“நிலவில் லேண்டர் தரையிறங்கும் நேரம் மாற்றம்”-இஸ்ரோ அறிவிப்பு!

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறுகையில், “சமுதாய நலனை கருத்தில் கொண்டு 11 கொள்கைகளை ராஜீவ் காந்தி உருவாக்கினார். 21- ஆம் நூற்றாண்டின் இந்தியாவை உருவாக்குவதில் தனித்துவமான பங்கை ராஜீவ் காந்தி கொண்டிருந்தார்”. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தந்தையின் பிறந்தநாளை கொண்டாட கேடிஎம் 390 பைக்கில் ராகுல் காந்தி லடாக் பயணம்

லடாக் பாங்காங் ஏரியில் ராஜீவ் காந்தியின் உருவப் படத்துக்கு மரியாதைச் செலுத்திய பின் பேட்டியளித்த அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி, “எனக்கு சிறந்த ஆசிரியர்களில் ஒருவர் தந்தை ராஜீவ் காந்தி. பூமியின் அழகான இடம் பாங்காங் என தந்தை ராஜீவ் காந்தி கூறியிருந்தார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

MUST READ