Homeசெய்திகள்இந்தியாட்விட்டரில் ‘தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.பி’ என மாற்றிய ராகுல்காந்தி

ட்விட்டரில் ‘தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.பி’ என மாற்றிய ராகுல்காந்தி

-

- Advertisement -

ட்விட்டரில் ‘தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.பி’ என மாற்றிய ராகுல்காந்தி

எம்பி பதவியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், ராகுல்காந்தி டிவிட்டரில் தனது சுய விவரத்தை மாற்றியுள்ளார்.

Rahul

அவதூறு வழக்கில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. 2 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால் ராகுல்காந்தியின் எம்.பி பதவி பறிக்கப்பட்டன. இதற்கு காங்கிரஸ் கட்சி மட்டுமல்லாமல், எதிர்கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ராகுல்காந்தியிடமிருந்து பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து, நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் வயநாடு எம்பி என இருந்த தனது சுய விவரத்தை ராகுல்காந்தி தற்போது மாற்றியுள்ளார். அதில், தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.பி. எனக் குறிப்பிட்டுள்ளார்.

MUST READ