
ராஜஸ்தான் மாநில முதலமைச்சராக பஜன்லால் சர்மா ஒருமனதாகத் தேர்வுச் செய்யப்பட்டுள்ளார்.
அஜித் நடிக்கும் விடாமுயற்சி படத்தின் கதை இதுதானா!
ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. பா.ஜ.க.வின் மேலிட பொறுப்பாளர்களான மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் மத்திய நாடாளுமன்ற விவாகரத்துறை மற்றும் நிலக்கரி, கனிமங்கள் துறை அமைச்சர் பிரகாலத் ஜோஷி மற்றும் முன்னாள் முதலமைச்சரான வசுந்தரா ராஜே ஆகியோர் தலைமையில் நடைபெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், பஜன்லால் சர்மா மாநில முதலமைச்சராக ஒருமனதாகத் தேர்வுச் செய்யப்பட்டார்.
அதைத் தொடர்ந்து, பஜன்லால் சர்மாவுக்கு மத்திய அமைச்சர்கள் பூங்கொத்து கொடுத்து வாழ்த்துத் தெரிவித்தனர். ராஜஸ்தான் மாநிலத்தில் 10 நாட்களாக நீடித்து வந்த அரசியல் குழப்பம் முடிவுக்கு வந்தது.
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடிய ரஜினி… வைரலாகும் புகைப்படங்கள்!
ராஜஸ்தான் மாநில சட்டமன்றத் தேர்தலில் 199 சட்டமன்றத் தொகுதிகளில் 115 தொகுதிகளில் பா.ஜ.க. வெற்றி பெற்றது. சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மூன்று மாநிலங்களுக்கும் புதுமுகங்களை முதலமைச்சராக அறிவித்துள்ளது பா.ஜ.க.