கேரள லாட்டரியில் மெக்கானிக்கிற்கு அடித்த ரூ.25 கோடி ஜாக்பாட் – தமிழகத்தை சேர்ந்த முகவருக்கு ரூ. 2.25 கோடி பரிசு
கேரள லாட்டரித்துறை சார்பில் நேற்று ஓணம் பம்பர் லாட்டரி டிக்கெட்டுக்கான குலுக்கல் நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கடந்த இரண்டு மாதங்களாக இந்த குலுக்கலுக்காக காத்திருந்தனர் மக்கள். போட்டி போட்டுக்கொண்டு லாட்டரி டிக்கெட்டுகளையும் வாங்கி குவித்துள்ளனர். இந்நிலையில் அக்.9-ம் தேதி அதிர்ஷ்டம் யாருக்கு அடித்தது என்பது தெரியவந்தது.
அதில் முதல் பரிசான ரூ.25 கோடியை TG 434222 என்ற எண் கொண்ட லாட்டரி சீட்டுக்கு கிடைத்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வயநாட்டில் உள்ள சுல்தான் பத்தேரியில் வசிக்கும் ஒருவர், திருவோணம் பம்பர் BR-99 லாட்டரியில் 25 கோடி ரூபாய்க்கான ஜாக்பாட் முதல் பரிசை வென்றதாக கூறப்பட்டுள்ளது. இந்த லாட்டரி டிக்கெட்டை ஜினீஷ் ஏஎம் என்ற ஏஜென்ட் விற்பனை செய்ததாகவும் கூறப்படுகிறது. பனமரத்தில் உள்ள எஸ்கே லாட்டரி ஏஜென்சியின் உரிமையாளர் ஏஎம் ஜினீஷிடம் இருந்து முதல் பரிசுக்கான டிக்கெட் வாங்கப்பட்டுள்ளது.இதன் முடிவுகளை நிதி அமைச்சர் கே.என்.பாலகோபால் அக்.11 ஆம் தேதி திருவனந்தபுரத்தில் அறிவித்துள்ளார்.

மேலும், தலா ரூ.1 கோடிக்கான பத்து இரண்டாம் பரிசுகளில் ஒன்றையும் வயநாட்டைச் சேர்ந்த மற்றொருவர் வாங்கியதும் தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து முதல் பரிசை வென்ற அந்த அதிர்ஷ்டசாலி யார் என அறிய மக்கள் ஆர்வமாக இருந்தனர். ஆனால் 25 கோடி ரூபாயை வென்ற நபர் குறித்து பெரும் மர்மம் நீடித்து வந்த நிலையில் தற்போது அந்த மர்மம் வெளியாகியுள்ளது.
2024ம் ஆண்டுக்கான கேரளாவின் ஓணம் பம்பர் லாட்டரியின் முதல் பரிசு ₹25 கோடியை கர்நாடகாவை சேர்ந்த மெக்கானிக் அல்தாப் என்பவர் வென்றிருக்கிறார். வயநாட்டிற்கு உறவினர் வீட்டிற்கு வந்தபோது இவர் இந்த லாட்டரியை வாங்கி உள்ளார். பாண்டியாபுரத்தில் மெக்கானிக் வேலை பார்த்து வரும் அவர் கடந்த 15 ஆண்டுகளாக லாட்டரி சீட்டு வாங்கி வந்த அல்தாப்-க்கு இறுதியாக அதிர்ஷ்டம் கை கூடியது என தெரிவித்துள்ளார். இப்பணத்தில் சொந்த வீடு கட்டி, தனது மகன், மகள் திருமணத்தை செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஒரே நாளில் பல கோடிகளுக்கு அதிபதி ஆகியுள்ளார் மெக்கானிக் அல்தாஃப். பரிசு தொகை 25 கோடி ரூபாயில் TDS 30 சதவீதம் பிடித்தம் செய்யப்படும். மேலும் முகவர் கமிஷன் தொகையாக 10 சதவீதமும், சுகாதாரம் மற்றும் கல்விக்கான செஸ் வரி 36,99,000 ரூபாய் பிடித்தம் செய்யப்படும் என தெரியவருகிறது.
இரண்டே நாட்களில் 100 கோடியை வேட்டையாடிய ரஜினியின் ‘வேட்டையன்’!
கூடுதல் செலவாக 2,49,75,000 ரூபாய் கேரள லாட்டரித்துறையால் பிடித்தம் செய்யப்படும். இந்த தொகையெல்லாம் போக மீதி இருப்பு தொகையான 12,88,26,000 ரூபாய் வெற்றி பெற்ற அதிர்ஷ்டசாலியான அல்தாஃப்புக்கு வழங்கப்படும் என தெரியவருகிறது. கேரள லாட்டரித்துறை ஓணம் பம்பர் லாட்டரியின் மூலம் 360 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.