
ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட்டிற்கு சோனியா காந்தி தலைவர் அல்ல, முன்னாள் முதலமைச்சரான வசுந்தரா ராஜேதான் தலைவர் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான சச்சின் பைலட் விமர்சனம் முன் வைத்துள்ளது அம்மாநிலத்தில் மீண்டும் அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
வ.உ.சிதம்பரனார், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் சிலைகளைத் திறந்து வைத்த முதலமைச்சர்!
செய்தியாளர்களிடம் பேசிய சச்சின் பைலட், முதலமைச்சர் அசோக் கெலாட் மீது பல முக்கிய குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். கடந்த 2020- ஆம் ஆண்டில் தமது ஆட்சி கவிழாமல் இருக்க, பா.ஜ.க.வின் மூத்த தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான வசுந்தரா ராஜேவும், இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களும் தான் உதவி செய்தார்கள் என அசோக் கெலாட் பேசியதைச் சுட்டிக்காட்டி சச்சின் பைலட் கடும் விமர்சனங்களை முன்வைத்தார்.
தான் வரும் வியாழன்கிழமை முதல் ராஜஸ்தான் மாநிலத்தில் பாதை யாத்திரை நடத்தவிருப்பதாகவும் அவர் அறிவித்தார்.
தமிழ்நாட்டில் 5 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு
ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட்டிற்கும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சச்சின் பைலட்டிற்கும் இடையே பனிப்போர் சில வாரங்களுக்கு முன்பு வெளிப்படையாக வெடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.