- Advertisement -

இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கியின் நிகர லாபம் 16,100 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதத்துடன் முடிந்த காலாண்டில் தனது வணிகம் தொடர்பான புள்ளி விவரங்களை பாரத ஸ்டேட் வங்கி வெளியிட்டுள்ளது.

‘பருவமழை முன்னெச்சரிக்கைப் பணி தீவிரம்’- மெட்ரோ நிர்வாகம் தகவல்!
இதன்படி, கடந்த காலாண்டில் நிகர லாபம் 16,100 கோடி ரூபாயாக அதிகரித்ததாகவும், இது முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டு லாபத்தைக் காட்டிலும் 9.13% அதிகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய வங்கிச் சேவையில் ஐந்தில் ஒரு பங்கை தன் வசம் வைத்திருக்கும் இந்த வங்கி, கடந்த காலாண்டில் 1 லட்சத்து 12 ஆயிரம் கோடி ரூபாய் வருவாயை ஈட்டியுள்ளது. வாராக்கடன் அளவு 2.55% ஆக இருப்பதாகவும், அந்த வங்கி கூறியுள்ளது.