Homeசெய்திகள்இந்தியாமுதலமைச்சராகப் பதவியேற்க உள்ள சித்தராமையா குறித்து விரிவாகப் பார்ப்போம்!

முதலமைச்சராகப் பதவியேற்க உள்ள சித்தராமையா குறித்து விரிவாகப் பார்ப்போம்!

-

- Advertisement -

 

முதலமைச்சராகப் பதவியேற்க உள்ள சித்தராமையா குறித்து விரிவாகப் பார்ப்போம்!
File Photo

சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு கர்நாடக மாநில முதலமைச்சர் பதவியில் அமரவிருக்கிறார் சித்தராமையா. இவரது பின்னணி குறித்து விரிவாகப் பார்க்கலாம்!

மத்திய சட்ட அமைச்சராக அர்ஜூன் ராம் மேவால் நியமனம்

சித்தராமையா கர்நாடகாவின் கடந்த 24 ஆண்டுகளில் இல்லாத அளவு மிகப்பெரிய வெற்றியை காங்கிரஸ் கட்சி ஈட்டுவதற்கு அடித்தளம் அமைத்தவர். மைசூரு பகுதியைச் சேர்ந்த இவர், மாநிலத்தில் 6% உள்ள குருபா என்ற பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர். எனினும், பெரும்பான்மையாக உள்ள லிங்காயத்துகள், ஒக்கலிகாச் சமூகத்துடனும் தனது செல்வாக்கை நிலை நாட்டியவர் சித்தராமையா.

40 ஆண்டுகளுக்கு மேலாக ஆழ்ந்த அரசியல் அனுபவம் மிக்கவர். அரசியல் நெழிவு, சுழிவுகளை அறிந்தவர். பெரிய அளவில் ஊழல் குற்றச்சாட்டுகள் இல்லாதது அவருக்கு ஒரு பிளஸ் பாயிண்ட். மக்களின் பிரச்சனைக்களுக்காக, களத்தில் இறங்கிப் போராட தயங்காதவரான சித்தராமையா, அதனாலேயே கர்நாடக அரசியலில் செல்வாக்கு மிக்க நபரானார்.

கர்நாடக முதலமைச்சராக சித்தராமையா தேர்வு- காங்கிரஸ் தலைமை அறிவிப்பு

எதையும், ஒழித்து, மறைத்து பேசாமல் மனதில் பட்டத்தை பளிச்சென பேசக் கூடியவர் சித்தராமையா. இதுவே அவருக்கு சில நேரங்களில் சிக்கல்களையும் ஏற்படுத்தியுள்ளது. ஜனதா, ஜனதா தளம் ஆகிய கட்சிகளில் பல்வேறு முக்கிய பதவிகளை வகித்துள்ளார். முன்னாள் பிரதமரான தேவ கவுடா தனது மகன் குமாரசாமியை வளர்க்கிறார் என போர்க்கொடி உயர்த்தியதால் ஜனதா தளம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார் சித்தராமையா. பின்னர் தன்னை காங்கிரஸ் கட்சியில் இணைத்துக் கொண்டார்.

கர்நாடகா அரசியலில் அமைச்சர், துணை முதலமைச்சர், முதலமைச்சர் என படிப்படியாக உயர்ந்த சித்தராமையா 13 முறை மாநில பட்ஜெட்டையும் சமர்ப்பித்த அனுபவம் கொண்டவர். காங்கிரஸ் கட்சி தேர்தலின் போது ஏராளமான வாக்குறுதிகளை அளித்துள்ள நிலையில், அவற்றை நிறைவேற்ற சித்தராமையாவின் அனுபவம் கை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவரது ஆட்சிக் காலத்தில் தலைநகர் பெங்களூருவில் இருந்து சிறு கிராமங்கள் வரை, பாகுபாடு எதுவுமின்றி உரிய முக்கியத்துவம் தந்து வளர்ச்சித் திட்டங்களை வகுத்தது.

எடுத்த முடிவில் உறுதியாக இருப்பவர், கணிக்க இயலாதவராகப் பார்க்கப்படும் சித்தராமையா பல தடைக் கற்களைக் கடந்து, மீண்டும் முதலமைச்சர் அரியணையில் ஏறவுள்ளார்.

MUST READ