Homeசெய்திகள்இந்தியாஅமேசான் பார்சலில் இருந்து சீரிய பாம்பு

அமேசான் பார்சலில் இருந்து சீரிய பாம்பு

-

- Advertisement -
kadalkanni

பெங்களூரில் அமேசான் நிறுவனத்தால் டெலிவரி செய்யப்பட்ட பார்சலை பிரித்து பார்த்த ஐடி தம்பதி அதில் பாம்பு ஒன்று சீரியதை கண்டு அதிர்ச்சி அடைத்தனர்.

அமேசான் பார்சலில் இருந்து சீரிய பாம்பு

பெங்களூருவில் ஐடி நிறுவனத்தில் பணியாற்றும் ஒரு தம்பதி வீடியோ கேம் கட்டுப்பாட்டு கருவி ஒன்றை ஆன்லைன் வாயிலாக வாங்க எண்ணி உள்ளனர். அதன்படி அமேசான் நிறுவனத்தில் அதனை ஆர்டரும் செய்துள்ளனர். வீடு தேடி வந்த டெலிவரி பிரதிநிதியிடம் இருந்து பார்சலை பெற்ற அந்த தம்பதி ஆவலுடன் அதனை பிரித்துள்ளனர்.

அப்போது பெட்டிக்குள் இருந்து திடீரென பாம்பு ஒன்று சீறியதால் அச்சமடைந்த அவர்கள் பார்சலை விட்டு தள்ளி சென்றனர். அதிர்ஷ்டவசமாக, பேக்கேஜிங் டேப்பில் சிக்கிக் கொண்டதால் ஆபத்திலிருந்து அவர்கள் தப்பினர்.

பாதிக்கப்பட்ட தம்பதி உரிய வீடியோ ஆதாரத்துடன் அமேசான் நிறுவனத்தின் சமூக வலைதள பக்கத்தில் முறையிட்டனர். அந்த பகிரப்பட்ட வீடியோவுக்கு பதிலளிக்கும் விதமாக, அமேசான் ட்வீட் செய்தது. அதில் “அமேசான் ஆர்டரில் உங்களுக்கு ஏற்பட்ட சிரமத்தைப் பற்றி அறிந்து வருந்துகிறோம். இதை சரிபார்க்க விரும்புகிறோம். தயவு செய்து தேவையான விவரங்களை இங்கே பகிரவும், மேலும் எங்கள் குழு ஒரு புதுப்பித்தலுடன் விரைவில் உங்களைத் தொடர்பு கொள்ளும்,” என்று தெரிவித்துள்ளனர்.

அமேசான் பார்சலில் இருந்து சீரிய பாம்பு

இதை எடுத்து மன்னிப்பு கூறிய அமேசான் நிறுவனம் அவர்கள் செலுத்திய முழு தொகையும் திரும்ப அளித்தது. ஆனால் பார்சலில் இருந்த பாம்பால் தங்களுக்கோ அல்லது டெலிவரி பிரதிநிதிக்கோ பாதிப்பு ஏற்படும் அச்சுறுத்தல் இருந்ததாக அந்த தம்பதி கூறியுள்ளனர்.

இதனை அடுத்து பாம்பு பொதுமக்கள் அணுக முடியாத பாதுகாப்பான இடத்தில் விடப்பட்டுள்ளது.

MUST READ