spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாகோடை விடுமுறை- சென்னையில் விமான சேவை அதிகரிப்பு!

கோடை விடுமுறை- சென்னையில் விமான சேவை அதிகரிப்பு!

-

- Advertisement -

Summer holidays- Increase in flight service in Chennai!

கோடை விடுமுறையையொட்டி, பயணிகள் வசதிக்காக சென்னையில் பல்வேறு நகரங்களுக்கு விமான சேவை அதிகரிக்கப்பட்டுள்ளது.

we-r-hiring

அதன்படி, சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி, திருச்சி, மதுரை, கோவை, பெங்களூரு ஆகிய நகரங்களுக்கு விமான நிறுவனங்கள் கூடுதல் விமான சேவைகளை அறிவித்துள்ளனர். அதேபோல், ஹைதராபாத், டெல்லி, கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களுக்கும் விமான சேவைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

சுமார் 40- க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவை அதிகரிப்பால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சென்னை- தூத்துக்குடி இடையே தினசரி 6 விமானங்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 8 விமானங்கள் இயக்கப்படுகிறது. சென்னை- கோவை இடையே தினமும் 12 விமானங்கள் இயக்கப்பட்ட நிலையில், தற்போது 16 விமானங்கள் இயக்கப்படுகிறது.

சென்னை- மதுரை இடையே 10 விமானங்களுக்கு பதில் 14 விமானங்கள் இயக்கப்படுகின்றன. சென்னை- பெங்களூரூ இடையே 16 விமானங்களுக்கு பதில் 22 விமானங்கள் இயக்கப்படுகின்றன. சென்னை- ஹைதராபாத் இடையே 20 விமானங்களுக்கு பதில் 28 விமானங்கள் இயக்கப்படுகின்றன

MUST READ