spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாதிருப்பதி மலைப்பாதை.. சிறுத்தை சிறுவனை தாக்கியது..

திருப்பதி மலைப்பாதை.. சிறுத்தை சிறுவனை தாக்கியது..

-

- Advertisement -

ஆந்திர மாநிலம் திருப்பதி மலைப் பாதையில் பாதயாத்திரை சென்றுகொண்டிருக்கும் போது 3 வயது சிறுவனை சிறுத்தை ஒன்று தாக்கியுள்ளது.

ஆந்திர மாநிலம் திருப்பதி மலைப் பாதையில் 3 வயது சிறுவனை சிறுத்தை ஒன்று கடித்து குதறியுள்ளது.இச்சம்பவம் அப்பகுதியில் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தொன்றுதொட்டு காலம் முதலே திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக அலிபிரி மலைப்பாதையில் பக்தர்கள் பாதயாத்திரையாக நடந்து செல்வது வழக்கம்.முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பல மேற்கொண்டுள்ள நிலையிலும்,சில சமயங்களில் இப்படிபட்ட அசம்பாவிதங்கள் நடைப்பெறதான் செய்கிறது.

we-r-hiring

7 ஆவது மலைப்பகுதியில் உள்ள பிரசன்ன ஆஞ்சிநேயர் கோவில் அருகே  சுமார் 3 வயது சிறுவன் கௌஷிக்  தனது பெற்றோருடன் பாதயாத்திரை சென்று கொண்டிருந்தான்.

அப்போது திடீரென அங்கு  வந்த சிறுத்தை ஒன்று சிறுவனை வாயில் கவ்வியபடி, புதருக்குள் சென்று மறைந்தது. இதைப்பார்த்த பெற்றோரும்,பக்தர்களும்,அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டதால் மிரண்ட சிறுத்தையானது சிறுவனை அங்கேயே விட்டுவிட்டு வனப்பகுதிகுள் ஓடி மறைந்துவிட்டது. சிறுத்தை தாக்கிய சிறுவனை உடனடியாக மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

சிறுத்தை தாக்கியதில் சிறுவனின் முகம்,கை கால்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.இச்சம்பத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட அலுவலர் சதீஷ் சிறுத்தை நடமாட்டம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும்,மேலும் சூரிய வெளிச்சம் உள்ள நேரத்தில் மட்டுமே மலைப்பாதையில் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.எனவே பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் பாதுகாப்புடன் செல்லவும், அனுமதிக்கப்பட்டுள்ள  நேரத்தில் மட்டுமே செல்ல வேண்டும் என கேட்டுக் கொள்வதாக கூறினார்.

 

MUST READ