
மனித தவறே ரயில் விபத்திற்கு காரணமாக இருக்கலாம் என ரயில்வேத் துறை தெரிவித்துள்ளது.
மருதுபாண்டியர் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை!
ஆந்திர மாநிலத்தில் நடைபெற்ற ரயில் விபத்து குறித்து கிழக்கு கடற்கரை ரயில்வே செய்தித் தொடர்பாளர், புவனேஸ்வரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, அவர் கூறியதாவது, “விசாகப்பட்டினம்- ராயகடா பயணிகள் ரயில் சிவப்பு விளக்கு எரிவதைக் கண்டப் பின்பும், முன்னேறிச் சென்றதால் விபத்து நேர்ந்தது.
விபத்துக்குள்ளான இரண்டு ரயில்களிலும் சுமார் 100 பயணிகள் இருந்துள்ளனர். மனித தவறே ரயில் விபத்திற்கு காரணமாக இருக்கலாம்” எனத் தெரிவித்துள்ளார்.
முத்துராமலிங்க தேவர் சிலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை!
இதனிடையே, விபத்து நடந்த இடம் ஒடிஷா அருகே இருப்பதால், மீட்பு மற்றும் நிவாரண பணிகளை நேரில் துரிதப்படுத்துமாறு, ஒடிஷா மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் அதிகாரிகளை அறிவுறுத்தியுள்ளார்.