spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாடெல்லி நீதிமன்றத்தில் துப்பாக்கிச்சூடு

டெல்லி நீதிமன்றத்தில் துப்பாக்கிச்சூடு

-

- Advertisement -

டெல்லி நீதிமன்றத்தில் துப்பாக்கிச்சூடு

டெல்லி சாகேத் நீதிமன்றத்தில் உள்ள வழக்கறிஞர்கள் அறைப்பகுதியில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காயமடைந்த பெண் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன (படம் நன்றி: ANI)

தில்லியில் உள்ள சாகேத் மாவட்ட நீதிமன்றத்தில் நான்கு முறை துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. துப்பாக்கிச் சூடு நடத்தியவர் வழக்கறிஞர் போல் மாறுவேடமிட்டு வந்ததாக தெரிகிறது. நிகழ்விடத்துக்கு சென்ற போலீசார், துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திவருகின்றனர். இதில் பெண் ஒருவரும், வழக்கறிஞர் ஒருவரும் படுகாயமடைந்தனர். அவர்கள் ஆபத்தான நிலையில், எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

we-r-hiring

இது குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலா அல்லது பயங்கரவாத தாக்குதலா என போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

MUST READ