உத்தரபிரதேசத்தில் மருத்துவக் கல்லூரி தீ விபத்தில் 10 பச்சிளம் குழந்தைகள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளனா்.
உத்தர பிரதேச மாநிலம் ஜான்சியில் உள்ள மகாராணி லக்ஷ்மி பாய் மருத்துவக் கல்லூரியின் பிறந்த குழந்தைகளின் தீவிர சிகிச்சைப் பிரிவில் (NICU) நேற்று இரவு 10:45 மணியளவில் திடீர் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இதில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்த 10 பச்சிளம் குழந்தைகள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். சம்பவம் நடந்த உடனே மருத்துவமனை நிர்வாகம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளது.
தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், மருத்துவமனையில் பற்றி எரிந்த தீயை அணைத்து அங்கிருந்த மற்ற 16 குழந்தைகளை உயிருடன் மீட்டுள்ளனர். பெரும் போரட்டத்திற்கு இடையே 10 குழந்தைகள் தீயில் கருகி உயிரிழந்துள்ளனர் என மாவட்ட நீதிபதி (டிஎம்) அவினாஷ் குமார் உறுதிப்படுத்தியுள்ளார். இறந்த குழந்தைகளின் உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட 10 குழந்தைகளில் ஏழு குழந்தைகளின் அடையாளம் காணப்பட்டுள்ளன, மீதமுள்ள மூன்று குழந்தைகளின் அடையாளம் காண முடிய வில்லை. தேவைப்பட்டால் டிஎன்ஏ சோதனைகள் மேற்கொள்ளப்படும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும் ஆத்திரமடைந்த உறவினர்கள் மருத்துவமனையில் முற்றுகையிட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குழந்தைகளின் அடையாளம் குறித்த குழப்பத்தைத் தவிர்ப்பதற்காக, தீ விபத்தில் காயமடைந்த அவர்களது குழந்தைகளைச் சந்திக்க பெற்றோர்கள் அனுமதிக்கப்படவில்லை என்று தெரிவிக்கின்றனர்.
அந்த நேரத்தில் குறைந்தது 54 குழந்தைகள் NICU வில் அனுமதிக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அடிச்சுத் தூக்கு… டிரம்பின் வெற்றியால் எலோன் மஸ்குக்கு அடித்த பம்பர் லாட்டரி