பயனாளர்களின் தரவுகளை வணிக நோக்கத்திற்காக பயன்படுத்தக்கூடாது என உச்சநீதிமன்றம் மெடாவுக்கு எச்சரித்துள்ளது.
வாட்ஸ்அப்பின் தனியுரிமைக் கொள்கை மற்றம் தரவு பாதுகாப்பு தொடர்பான வழக்கின் விசாரணையின் போது, வாட்ஸ்அப்பின் தாய் நிறுவனமான மெட்டாவை உச்சநீதிமன்றம் கடுமையாக எச்சரித்தது.

பயனாளர்களின் தரவுகளை வணிக நோக்கத்திற்காக பயன்படுத்தக் கூடாது என்றும், இந்தியர்களின் அந்தரங்க உரிமையில் எந்த விதத்திலும் தலையிட அனுமதிக்க முடியாது என்றும் நீதிமன்றம் தெளிவாக தெரிவித்துள்ளது.
இந்திய சட்டங்களை பின்பற்றவில்லை எனில் நாட்டில் இருந்து வெளியேறும் படியும் கடிந்து கொண்ட CJI சூரியகாந்த் சர்மா, இந்திய மக்களின் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் தரவுகள் பாதுகாப்பு மிக முக்கியமானது என்றும், நாட்டு மக்களின் தரவுகளில் ”ஒரு எழுத்தை” கூட பகிரந்து கொள்ள அனுமதிக்க முடியாது எனவும் குறிப்பிட்டாா்.
மேலும், இந்தியாவில் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வரும் வாட்ஸ்அப் போன்ற சமூக ஊடக தளங்கள், பயனாளர்களின் நம்பிக்கையை சிதைக்கும் வகையில் செயல்படக் கூடாது என்றும், தரவு பாதுகாப்பு தொடர்பான விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
பெண்ணையாறு விவகாரம்… ஒரு மாதத்தில் தீர்ப்பாயம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு…


