Homeசெய்திகள்இந்தியாவிவிபேட் வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு!

விவிபேட் வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு!

-

 

உச்சநீதிமன்ற நீதிபதியாக இரண்டு பேரை கொலீஜியம் அமைப்பு பரிந்துரை!
File Photo

100% ஒப்புகைச் சீட்டுகளை சரிபார்க்க உத்தரவிடக் கோரிய வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று (ஏப்ரல் 26) தீர்ப்பு வழங்கவுள்ளது.

அஜித்தின் கிளாசிக் பில்லா… திரையரங்குகளில் ரீ ரிலீஸ்….

வாக்கு இயந்திரங்களுடன் பதிவாகும் ஒப்புகைச் சீட்டுகளை 100% சரிபார்க்க கோரிய வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று (ஏப்ரல் 26) தீர்ப்பு வழங்குகிறது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, தீபாங்கர் தத்தா ஆகியோர் காலை 10.30 மணிக்கு தீர்ப்பளிக்கின்றனர்.

வாக்குச்சீட்டு முறையைப் பின்பற்றுவது பிற்போக்குத்தனமானது என தேர்தல் ஆணையம் வாதிட்டிருந்தது. தேர்தல்களில் முறைகேடு நடந்ததாக இதுவரை எந்த ஆதாரமும் தரப்படவில்லை என உச்சநீதிமன்றமும் கூறியிருந்தது. அரசியல் அமைப்பான ஆணையத்தை எப்படி நீதிமன்றம் கட்டுப்படுத்துவது என கேள்வியும் எழுப்பியிருந்தது.

சிங்கிள் ஷாட்டில் அசத்திய விஷால்… ரத்னம் மேக்கிங் வீடியோ வைரல்…

மனுதாரர், தேர்தல் ஆணையம் தரப்பில் வாதங்கள் வைக்கப்பட்ட நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது. அனைத்து சந்தேகங்களுக்கும் பதில் கிடைத்துள்ளது என உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்த நிலையில் தீர்ப்பு வழங்கப்படுகிறது.

MUST READ