
மகாராஷ்டிரா மாநிலம், நாசிக்கில் உள்ள கங்கோத்வரி கிராம மக்கள் தாகம் தணிக்க 70 அடி ஆழக் கிணற்றில் உயிரைப் பணயம் வைத்து இறங்க வேண்டிய சூழலில் உள்ளனர். மிகவும் ஆபத்தான முறையில் கிணற்றின் பக்கவாட்டில் உள்ள சிறிய இடைவெளிகளில் நின்றுக் கொண்டும், கயிறைப் பிடித்தபடி, கிணற்றுக்குள் இறங்கியும் தண்ணீர் எடுக்க வேண்டிய சூழல் உள்ளதாக அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

“சரத் பவார் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!
சுமார் 10 ஆண்டுகளாக இந்த பிரச்சனை நீடிப்பதாகவும், ஆனால் இதற்கு தீர்வு காண யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் வேதனை தெரிவித்துள்ளனர் இந்த பகுதி மக்கள். தற்போது கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், இந்த பகுதியில் மேலும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என்று அச்சம் தெரிவித்துள்ள மக்கள், எங்கள் பகுதியில் தண்ணீர் பிரச்சனையைத் தீர்க்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
4 மாதங்களில் 386 அவதூறு வீடியோக்கள் நீக்க கடிதம்
கிணற்றில் இறங்கி பொதுமக்கள் தண்ணீர் எடுக்கும் வீடியோ ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


