Homeசெய்திகள்இந்தியாவக்ஃபு சட்டத்திருத்த மசோதா திருத்தம் என்ன சொல்கிறது ?

வக்ஃபு சட்டத்திருத்த மசோதா திருத்தம் என்ன சொல்கிறது ?

-

வக்பு சட்டத்திருத்த மசோதா திருத்தம் என்ன சொல்கிறது ?

வக்ஃபு என்றால் என்ன?
இஸ்லாம் சட்டப்படி இஸ்லாமியர்கள் ஆன்மீக மற்றும் தொண்டு ரீதியான அளிக்கும் சொத்துக்கள் வக்ஃபு என்று வகைப்படுத்தப்படுகிறது. வக்பு என தீர்மானிக்கப்படும் சொத்துக்கள் அவர்களின் பெயரில் இருந்து அல்லாவிற்கு அளிப்பதாக கருதப்படுகிறது.

வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதாவை லோக்சபாவில், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தாக்கல் செய்தார். இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் மசோதா, பார்லி., கூட்டுக்குழு அனுப்பப்பட்டுள்ளது. 1995, வக்பு வாரிய சட்டத்தில் இடம்பெற்றுள்ள சில முக்கிய அம்சங்கள் திருத்தம் செய்யப்பட்டு இன்று மசோதா தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

திருத்தப்பட்ட முக்கிய அம்சங்கள்

  • பழைய சட்டத்தின்படி, அத்தகைய முடிவுகள் வக்ஃபு தீர்ப்பாயத்தால் எடுக்கப்பட்டன. இந்த அதிகாரத்தை சொத்துக்களை அபகரிப்பதாகவும், தவறாக பயன்படுத்துவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனை அடுத்து அதில் மாற்றம் கொண்டுவரப்பட்டு, ஒரு சொத்து வக்ஃபு வாரிய சொத்தா அல்லது அரசு நிலமா என்பதை மாவட்ட கலெக்டரே தீர்மானிக்கலாம்.
  •  முன்பு, வாரியமே சொத்துக்களை நிர்வகிக்க முடியும். அதுவே தற்போது, வாரியங்கள் சொத்துக்களை நிர்வகிப்பதில் வெளிப்படை தன்மை கொண்டுவரப்பட்டுள்ளது.
  • வக்ஃபு வாரியத்தின் முடிவுகளை எதிர்த்து கோர்ட்டில் முறையீடு செய்ய இயலாது, வக்ஃபு தீர்ப்பாயத்தில்தான் முறையிட முடியும். இனிமேல், வக்ஃபு வாரியத்தின் உத்தரவுகளை எதிர்த்து கோர்டில் முறையிடலாம்.
  •  வாரியத்திற்கே சொத்துக்களுக்கான உரிமை இருந்தது. அதில் திருத்தம் கொண்டுவரப்பட்டு, சொத்துக்களுக்கு வாரியம் உரிமை கோர முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • மத்திய வக்ஃபு கவுன்சில் , மாநில வக்ஃபு வாரியங்களில் பெண்களுக்கு அனுமதியில்லை. புதிய சட்டத்திருத்தின்படி, மத்திய வக்ஃபு கவுன்சில், மாநில வக்ஃபு வாரியங்களில் முஸ்லிம் பெண்கள் மற்றும் முஸ்லிம் அல்லாதோர் இடம்பெறுவர்.
  • சொத்துக்களை, வக்ஃபு தீர்ப்பாயமே ஆய்வு செய்யும்.  இனி சொத்துக்களை சர்வே கமிஷனர் முதல் மாவட்ட கலெக்டர் வரை அல்லது கலெக்டரால் நியமிக்கப்படும் துணை கலெக்டர் ஆய்வு செய்யக் கூடும்.
  •  தற்போது வரை வக்ஃபு வாரிய குழுவில் 3 முஸ்லிம் எம்.பி.,க்கள் இடம்பெற்றிருப்பர். புதிய விதிகளின்படி, 3 எம்.பி.,க்கள் கொண்ட அந்த குழுவில் முஸ்லிம் அல்லாதவர்களும் இடம்பெற்றிருப்பர்.
  •  வக்ஃபு சொத்துக்களை விற்க முடியாது என்ற சூழல் இருந்த நிலையில், இனி சொத்துக்கள் அனைத்தும், பொதுவான மத்திய தளத்தின் வாயிலாகவே பதிவு செய்ய வேண்டும்.
  • வக்ஃபு சொத்துக்களை வாரியமே நிர்வகித்து வந்த நிலையில், புது விதிகளின்படி, வக்ஃபு சொத்துக்கள் பற்றிய தகவல்கள் தொகுக்கப்பட வேண்டும்.
  • சொத்துக்களை பதிவு செய்வதில் வருவாய் சட்டங்கள் பொருந்தாது என்ற நிலை இருந்துவந்தது. தற்போது, சொத்து பதிவு செய்யப்படுவதற்கு முன், வருவாய் சட்டங்கள் பின்பற்றப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.
  • முன்பு, வக்ஃபு வாரியச் சொத்துக்கள் வாயிலாக கிடைக்கும் வருவாய் தொடர்பான தகவல்கள் பதிவிட வேண்டிய அவசியமில்லை. இனி, வருவாய் தொடர்பான தகவல்கள் மற்றும் அதன் நடவடிக்கைகள் அனைத்தும் மத்திய தளத்தில் பதிவிட வேண்டும்.

மக்களவையில் வக்ஃப் சட்டத் திருத்த மசோதா அறிமுகம் – எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

  • போராக்கள் மற்றும் அகாகானிகளுக்கென தனி வாரியம் இருந்ததில்லை. அவற்றில் திருத்தம் கொண்டுவரப்பட்டு, புது விதிகளின்படி போராக்கள் மற்றும் அகாகானிகளுக்கென தனி வாரியம் அமைக்கப்படும். வக்பு வாரியங்களில், சன்னி, ஷியா, போரா, அகாகானிஸ் மற்றும் அந்த மதத்தின் பிற்படுத்தப்பட்ட பிரிவினரும் இடம்பெறுவர்.

MUST READ