
பெண்ணை காட்டுக்குள் அழைத்துச் சென்று கொலை செய்த இளைஞரை கைது செய்தது காவல்துறை.

பிளஸ் 2 தேர்வு முடிவுகளை வெளியிட்டார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்!
கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள அங்கமாலி என்னும் பகுதியைச் சேர்ந்தவர் ஆதிரா. கடந்த ஏப்ரல் 29- ஆம் தேதி அன்று திடீரென மயமான இவர், அதிரப்பள்ளி வனப்பகுதிக்குள் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார். இதையடுத்து, பல்பொருள் அங்காடியில் ஆதிராவுடன் பணியாற்றி வந்த அகில் என்பவரை பிடித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர்.
அதில், இன்ஸ்டாகிராமில் தான் பதிவேற்றம் செய்த காதல் ரீல் வீடியோக்களைப் பார்த்து ஆதிரா தம்முடன் பேசத் தொடங்கியதாகவும், பின்னர் தங்களுக்குள் திருமணத்தை மீறிய உறவு ஏற்பட்டதாகவும் அகில் கூறியுள்ளார். மேலும், ஆதிராவின் நகைகளைப் பெற்று அடமானம் வைத்ததாகவும், அவற்றை மீட்டுத் தரும்படி வற்புறுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.
பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் – விருதுநகர் மாவட்டம் முதலிடம்
அதனால் அதிரப்பள்ளி அருவிக்கு அருகே உள்ள காட்டுக்குள் அழைத்துச் சென்று கழுத்தை நெரித்தும், ஷூ காலால் மிதித்தும் ஆதிராவைக் கொலை செய்ததாக அகில் கூறியுள்ளார். இதனையடுத்து, அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.