Homeசெய்திகள்இந்தியாபேச்சுவார்த்தைக்கு வருமாறு மல்யுத்த வீரர், வீராங்கனைகளுக்கு மத்திய அமைச்சர் அழைப்பு!

பேச்சுவார்த்தைக்கு வருமாறு மல்யுத்த வீரர், வீராங்கனைகளுக்கு மத்திய அமைச்சர் அழைப்பு!

-

 

பேச்சுவார்த்தைக்கு வருமாறு மல்யுத்த வீரர், வீராங்கனைகளுக்கு மத்திய அமைச்சர் அழைப்பு!
File Photo

போராட்டம் நடத்தி வரும் மல்யுத்த வீரர், வீராங்கனைகளை மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர், பேச்சுவார்த்தைக்கு மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார்.

ஐ.ஏ.எஸ். அதிகாரி மலர்விழி வீட்டில் சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்புத்துறை!

இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங் மீதான பாலியல் புகாரை முன் வைத்து இந்திய மல்யுத்த வீரர், வீராங்கனைகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பா.ஜ.க. எம்.பி.யான பிரிஜ் பூஷண் சரண் சிங்கை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அவர்களுக்கு பல்வேறு விவசாய சங்கங்கள் ஆதரவு அளித்து வருகின்றனர்.

இந்த நிலையில், மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர், மல்யுத்த வீரர், வீராங்கனைகளை மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார். இது குறித்து ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “மல்யுத்த வீரர்களின் பிரச்சனைகள் குறித்து கலந்துரையாட மத்திய அரசு தயாராக இருப்பதாகவும், அது குறித்து பேச்சுவார்த்தை நடத்த மல்யுத்த வீரர்களை மீண்டும் அழைப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

எம்.ஆர்.பி.ஐ விட கூடுதலாக விற்பனை செய்த அங்காடி ரூபாய் 10,000 அபராதம் விதிப்பு!

இதனிடையே, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்த மல்யுத்த வீரர், வீராங்கனைகள், பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது டெல்லி காவல்துறை தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்; அவர் மீது விரைந்து குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ