பொதுவாக அனைவரும் காலையில் எழுந்தவுடன் பல் துலக்குவதை தான் முதல் வேலையாக வைத்திருப்பார்கள்.
ஏனென்றால் வாயிலிருந்து துர்நாற்றம் வீசும். நம் வாயில் இரவு நேரம் முழுவதும் உமிழ்நீர் சுரப்பு குறைந்து விடுவதால் வாயில் வறட்சி அதிகரித்து துர்நாற்றம் வீசும். எனவே காலையில் எழுந்ததும் பல் துலக்குவது தான் வழக்கம். ஆனால் பல் துலக்குவதற்கு முன்பாக தண்ணீர் குடித்தால் பல நன்மைகள் கிடைப்பதாக சொல்லப்படுகிறது.
பெரும்பாலானவர்கள் பல் துலக்கிய பின்னர்தான் தண்ணீர் குடிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். ஆனால் பல் துலக்கிய உடனேயே தண்ணீர் குடிக்காமல் 30 நிமிடங்கள் கழித்து தான் தண்ணீர் குடிக்க வேண்டுமாம். மேலும் பல் துலக்குவதற்கு முன்னர் தண்ணீர் குடித்தால் வாயில் உள்ள துர்நாற்றம் குறைந்து புத்துணர்ச்சி அடையும்.
அதாவது காலையில் பல் துலக்கும் முன் தண்ணீர் குடிப்பது, இரவில் குடலில் அதிகமாக சுரந்து இருக்கும் அமலத் தன்மையை குறைத்து, அஜீரணத்தை குறைத்து ஜீரண ஆற்றலை அதிகரிக்குமாம். இது தவிர காலையில் எழுந்ததும் எவ்வளவு அதிகமாக தண்ணீர் குடிக்கிறோமோ அந்த அளவிற்கு நம் சருமமும் ஆரோக்கியமாக இருக்குமாம். மேலும் நம் உடலானது கழிவுகளை நீக்கி சருமத்தை புத்துணர்ச்சியாகவும் பளபளப்பாக வைத்திருக்குமாம்.

பல் துலக்கும் முன் தண்ணீர் குடிக்கும் பழக்கம் இருந்தால் அது நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவடைய செய்யும் என்று சொல்லப்படுகிறது. சளி, காய்ச்சல், இருமல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதும் குறையும். எனவே குளிர்ந்த நீரோ, வெதுவெதுப்பான நீரோ எதுவாக இருந்தாலும் காலையில் எழுந்ததும் பல் துலக்கும் முன் குடிப்பது நல்லது. ஏனென்றால் இது எந்தவித பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது. இருப்பினும் ஏதேனும் தொந்தரவு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது.


