இரவில் சாப்பிட வேண்டிய உணவுகள்:
இரவில் பொதுவாக எளிதில் ஜீரணமாகும், லேசான, தூக்கத்திற்கு தடை இல்லாத உணவுகளை சாப்பிடுவது நல்லது.

அந்த வகையில் ஆவியில் வேகவைத்த இட்லி, இடியாப்பம் மற்றும் தோசை போன்றவற்றை இரவில் சாப்பிடலாம். இது எளிதில் ஜீரணமாகி நிம்மதியான உறக்கத்திற்கு வழிவகை செய்யும். இது தவிர ராகி கூழ், காய்கறி சூப், திணை வகைகள் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். சாதம் வகைகளை எடுத்தால் குறைந்த அளவில் எடுத்துக் கொள்வதும், அத்துடன் காய்கறி வகைகளை சேர்த்துக் கொள்வதும் நல்லது. மேலும் 8 மணிக்குள் இரவு சாப்பாட்டை முடிப்பது உடலுக்கு பல நன்மைகளை தரும்.
இரவில் தவிர்க்க வேண்டிய உணவுகள்:
பரோட்டா, சப்பாத்தி போன்ற ஜீரணமாகாத உணவுகளை இரவில் தவிர்க்க வேண்டும். கொழுப்பு நிறைந்த உணவுகளும், காரமான உணவுகளும், அசைவ உணவுகளும் எளிதில் ஜீரணம் ஆகாது.
இது வயிற்றில் கனத்தை ஏற்படுத்தி வாயு பிரச்சனை, வயிற்றில் அசௌகர்யம், அசிடிட்டி மட்டுமல்லாமல் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரித்து தூக்கத்திற்கு இடையூறு செய்யும். எனவே இரவு நேரத்தில் லேசான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். காபி, டீ, குளிர்பானங்கள், எண்ணெயில் பொறித்த உணவுகள், அதிக கார்போஹைட்ரேட் உணவுகள், மசாலா உணவுகள், இனிப்பு வகைகள், பழங்கள் போன்றவற்றை தவிர்ப்பது நம் உடலுக்கும் ஆரோக்கியத்திற்கும் நல்லது.
இருப்பினும் இது தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருந்தால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றுக் கொள்வது சிறந்தது.


