Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்சர்க்கரை வியாதிக்கு தீர்வு தரும் மாங்கொழுந்து!

சர்க்கரை வியாதிக்கு தீர்வு தரும் மாங்கொழுந்து!

-

சர்க்கரை வியாதிக்கு தீர்வு தரும் மாங்கொழுந்து!சர்க்கரை வியாதிக்கு தீர்வு தரும் மாங்கொழுந்து!

சர்க்கரை நோய் உள்ளவர்கள் பிடித்தமான உணவுகளை சாப்பிட முடியாமல் அவதிப்படுவதுண்டு. ஆனால் இந்த சர்க்கரை வியாதி வயதானவர்களை மட்டுமல்லாமல் கர்ப்பிணி பெண்களையும் குழந்தைகளையும் கூட பாதிக்கிறது. எனவே குறிப்பிட்ட ஒரு சில உணவு வகைகளை சாப்பிடலாமா? வேண்டாமா? என்ற சந்தேகத்தினாலேயே பலர் அந்த உணவுப் பொருட்களை சாப்பிடாமல் தவிர்ப்பது உண்டு. அதில் ஒன்றுதான் மாம்பழம். நீரழிவு நோய் இருப்பவர்கள் மாம்பழம் சாப்பிடக்கூடாது என்றும் அதனால் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்து விடும் என்று சில மருத்துவர்கள் கூறுவதையும் கேட்டிருக்கிறோம். ஆனால் மாம்பழத்தை விட மாங்கொழுந்து சர்க்கரை நோய்க்கு தீர்வு தருவதாக சொல்லப்படுகிறது.சர்க்கரை வியாதிக்கு தீர்வு தரும் மாங்கொழுந்து! அதாவது மா இலைகளின் கொழுந்துகளை எடுத்து அதில் துவரம் பருப்பு, உப்பு ஆகியவற்றை சேர்த்து வேகவைத்து சாப்பிட்டு வர சர்க்கரை நோய் கட்டுக்குள் வருமாம். எனவே சர்க்கரை நோய் உடையவர்கள் மாங்கொழுந்தினை சாப்பிடுவது குறித்து உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக் கொண்டு அதை எடுத்துக் கொள்வது நல்லது. மேலும் இந்த மாங்கொழுந்தில் இப்படி ஒரு அற்புத குணம் இருக்கும் என்பது பலருக்கும் தெரியாது. எனவே உங்கள் நண்பர்கள் உறவினர்களுக்கும் இந்த டிப்ஸை சொல்லுங்கள். அவர்களும் இதனால் பயன்பெறட்டும்.சர்க்கரை வியாதிக்கு தீர்வு தரும் மாங்கொழுந்து!அடுத்தது இந்த மாங்கொழுந்துகளை தண்ணீரில் போட்டு காய்ச்சி அந்த நீரை பருகி வர வாய்ப்புண், வயிற்றுப்புண், வீக்கங்கள், கட்டிகள் போன்றவை குணமாகும். அதுமட்டுமில்லாமல் இந்த மாவிலை நீரில் சிறிதளவு தேன் கலந்து குடித்து வர ரத்தக்குழாயில் ஏற்படும் அடைப்புகளால் ஏற்படும் நரம்பு சுருட்டல் பிரச்சனை சரி செய்யப்படும். இது ரத்த ஓட்டத்தை சீராக்கும் திறன் உடையது என்பதும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

MUST READ