Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்தினசரி உணவில் சேர்க்கப்படும் நஞ்சு...... உயிருக்கே ஆபத்தாகும் உப்பு!

தினசரி உணவில் சேர்க்கப்படும் நஞ்சு…… உயிருக்கே ஆபத்தாகும் உப்பு!

-

- Advertisement -

தினசரி உணவில் சேர்க்கப்படும் நஞ்சு...... உயிருக்கே ஆபத்தாகும் உப்பு!மனிதன் உணவு பொருட்களை சமைத்து உண்ணத் தொடங்கிய காலத்திலிருந்து உணவின் சுவைக்கு இன்றியமையாத பொருளாக உப்பு சேர்க்கப்பட்டு வருகிறது. அதிலும் நவீன யுகத்தில் நச்சு உரங்களால் உணவுகள் ஏற்கனவே நஞ்சாக மாறி வருகின்றன. இதனால் இன்றுள்ள காலகட்டத்தில் பெரும்பாலானவர்களுக்கு உப்பு என்பது விஷமாக மாறி வருகிறது என்பது எத்தனை பேருக்கு தெரியும். பல ஆண்டுகளாகவே உலக சுகாதார மையம் உப்பின் அளவை குறைக்கும் படி மனிதர்களுக்கு வலியுறுத்தி வருகிறது. அதன்படி 2023 ஆம் ஆண்டிற்குள் உப்பின் அளவை குறைத்து உயிரிழப்பு ஏற்படுவதையும் தடுக்க வேண்டும் என்ற இலக்கை நிர்ணயம் செய்தது. ஆனால் கடந்த ஆண்டு வரை இந்த உப்பின் அளவை அதிகமாக பயன்படுத்துவது குறைந்த பாடில்லை.தினசரி உணவில் சேர்க்கப்படும் நஞ்சு...... உயிருக்கே ஆபத்தாகும் உப்பு!

தினமும் நாம் அன்றாட உணவில் சேர்க்கப்படும் உப்பை ஒரு மனிதன் நாளொன்றுக்கு 5 கிராம் அளவு தான் எடுத்துக் கொள்ள வேண்டும். குழந்தைகள் ஐந்து கிராமிற்கும் குறைவாக எடுத்துக் கொள்வது அவசியம். ஆனால் நாம் நாளொன்றுக்கு 11 கிராம் அளவு உப்பினை எடுத்துக் கொள்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதன் விளைவாக ரத்த அழுத்தம் சம்பந்தமான நோய்கள் பல ஏற்பட்டு உயிருக்கே ஆபத்தாகும் நிலை ஏற்படுகிறது. இதனால் இளம் வயதினருக்கு கூட மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பு உண்டாகிறது.தினசரி உணவில் சேர்க்கப்படும் நஞ்சு...... உயிருக்கே ஆபத்தாகும் உப்பு! அதுமட்டுமில்லாமல் இதய நோய், புற்றுநோய், பக்கவாதம் போன்ற நோய்கள் ஏற்படுவதற்கும் இந்த உப்பு ஆனது முக்கிய காரணமாக அமைகிறது. அதேசமயம் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படுபவர்களில் பெண்களை விட ஆண்களை அதிகம். எனவே நான் ஒன்றுக்கு ஐந்து கிராம் உப்பினை பயன்படுத்துவது மிகவும் அவசியம். அவற்றை நாம் தினமும் அதிக அளவில் பயன்படுத்துவது நமக்கு நாமே விஷம் கொடுப்பதற்கு சமம். எனவே உப்பின் அபாயத்தை அறிந்து அதன் அளவை குறைத்துக் கொள்வது நல்லது.

MUST READ