Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்முகத்தில் வடியும் எண்ணெய் பசையை கட்டுப்படுத்த சில டிப்ஸ்!

முகத்தில் வடியும் எண்ணெய் பசையை கட்டுப்படுத்த சில டிப்ஸ்!

-

- Advertisement -

முகத்தில் வடியும் எண்ணெய் பசையை கட்டுப்படுத்த சில டிப்ஸ்!எண்ணெய் பசை சருமம் உடையவர்கள் அதிக சரும பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். எந்த நேரமும் முகத்தில் எண்ணெய் வழிவதால் முகம் பொலிவிழந்து காணப்படுகிறது.

தினமும் மஞ்சள் பூசி குளிப்பதனால் முகம் பொலிவுடன் இருப்பது மட்டுமல்லாமல்
எண்ணெய் வடிவதையும் கட்டுப்படுத்தும்.

4 தேக்கரண்டி எலுமிச்சை சாறு எடுத்து அதில் ஒரு தேக்கரண்டி அளவு தேன் கலந்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் வரை ஊற வைத்து பின் குளிர்ந்த நீரில் கழுவி வர முகத்தில் வடியும் எண்ணெய் பசையை கட்டுப்படுத்தலாம்.முகத்தில் வடியும் எண்ணெய் பசையை கட்டுப்படுத்த சில டிப்ஸ்!

3 ஸ்பூன் கற்றாழை ஜெல் எடுத்து அதில் 1 ஸ்பூன் தேன் கலந்து முகத்தில் தேய்த்து, 15 நிமிடங்கள் ஊற வைத்து குளிர்ச்சியான நீரில் கழுவினால் மாற்றத்தை காணலாம்.

இரண்டு ஸ்பூன் அளவு ஆரஞ்சு ஜூஸ், ஒரு ஸ்பூன் அளவு மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் அளவு தேன் ஆகியவற்றை கலந்து இரவில் தூங்கும் முன் முகத்தில் தடவி இரவு முழுவதும் ஊற வைத்து மறுநாள் காலையில் கழுவி வர முகத்தில் எண்ணெய் வடிவதை கட்டுப்படுத்தலாம். இதனை தினமும் செய்து வரலாம்.

நான்கு ஸ்பூன் அளவு தக்காளி சாறு எடுத்து அதில் ஒரு ஸ்பூன் அளவு தேன் கலந்து முகத்தில் தேய்த்து, 20 நிமிடங்கள் ஊறவைத்து பின் கழுவி வர சருமத்தின் எண்ணெய் பசை குறைய ஆரம்பிக்கும்.முகத்தில் வடியும் எண்ணெய் பசையை கட்டுப்படுத்த சில டிப்ஸ்!

ஆரஞ்சு பழத்தின் தோலை நன்கு உலர வைத்து பொடி செய்து கொள்ள வேண்டும். பின்னாளில் ஒரு ஸ்பூன் அளவு பொடியை எடுத்து பாலில் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு கலந்து முகத்தில் தடவி காய வைக்க வேண்டும். பத்து நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவி பெற நல்ல பலன் கிடைக்கும்.

இம்முறைகளை எல்லாம் ஒரு முறை பயன்படுத்தி பார்த்துவிட்டு எந்தவித ஒவ்வாமையும் ஏற்படவில்லை என்றால் தேவைப்படும் சமயங்களில் பயன்படுத்தலாம்.

MUST READ