Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்உச்சி வெயில் மண்டைய பொலக்குதா..... இந்த சம்மர் ட்ரிங்க் ட்ரை பண்ணுங்க!

உச்சி வெயில் மண்டைய பொலக்குதா….. இந்த சம்மர் ட்ரிங்க் ட்ரை பண்ணுங்க!

-

பொதுவாகவே கோடைகாலம் என்பது ஏப்ரல் நல்லது மே மாதத்தில் தான் தொடங்கும். ஆனால் இப்போது மார்ச் மாதத்திலேயே வெயில் தாக்கம் வாட்டி எடுக்கிறது. வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க நாள் ஒன்றுக்கு மூன்று லெட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். அதே சமயம் இளநீர், மோர், சர்பத், தர்பூசணி போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். இது மட்டுமல்லாமல் இந்த சம்மர் ட்ரிங்க் ட்ரை பண்ணி பாருங்க.உச்சி வெயில் மண்டைய பொலக்குதா..... இந்த சம்மர் ட்ரிங்க் ட்ரை பண்ணுங்க!

ஸ்ட்ராபெரி வெள்ளரி ஆரஞ்சு ஜூஸ் செய்வது எப்படி?

ஸ்ட்ராபெரி வெள்ளரி ஆரஞ்சு ஜூஸ் செய்ய முதலில் ஒரு கப் ஸ்ட்ராபெரி, ஒரு ஆரஞ்சு பழம், ஒரு கப் வெள்ளரி, தேவையான அளவு தண்ணீர், தேவையான அளவு சர்க்கரை ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் தோல் உரித்த விதைகளை நீக்கிய ஆரஞ்சு பழம், ஸ்ட்ராபெரி, வெள்ளரி ஆகியவற்றை சேர்த்து அரைத்து அத்துடன் தேவையான அளவு தண்ணீர் மற்றும் சர்க்கரை சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். உச்சி வெயில் மண்டைய பொலக்குதா..... இந்த சம்மர் ட்ரிங்க் ட்ரை பண்ணுங்க!இந்த ஜூஸ் ஏற்கனவே இனிப்பு சுவையுடன் இருக்கும் இருப்பினும் தேவைப்பட்டால் தேன் அல்லது நன்னாரி கலந்து கொள்ளலாம். இந்த ஜூஸ் உடலுக்கு குளிர்ச்சியை மட்டும் அல்லாமல் புத்துணரச்சியையும் தரக்கூடியது. ஆகவே நீங்களும் ஒருமுறை இதை ட்ரை பண்ணி பாருங்க.

MUST READ