Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்பருக்களால் ஏற்பட்ட தழும்புகள் மறைய வேண்டுமா?.... இதை செய்யுங்கள்!

பருக்களால் ஏற்பட்ட தழும்புகள் மறைய வேண்டுமா?…. இதை செய்யுங்கள்!

-

- Advertisement -

முகத்தின் அழகைக் கெடுப்பதில் முகப்பரு மட்டுமில்லாமல் அது விட்டு செல்லும் தழும்புகளும் முக்கிய காரணமாக அமைகிறது. அதன்படி முகத்தில் ஏதேனும் தழும்புகள் ஏற்பட்டால் அது விரைவில் குணமாகாது. இதனால் பலரும் கடைகளில் விற்கப்படும் கிரீம்களை வாங்கி பயன்படுத்துகிறார்கள். இது எந்த பலனையும் தருவதில்லை. இதற்காக இயற்கையான முறையில் முகப் பருக்களால் ஏற்பட்ட தழும்புகளை சரி செய்யலாம்.பருக்களால் ஏற்பட்ட தழும்புகள் மறைய வேண்டுமா?.... இதை செய்யுங்கள்!

முதலில் அரைக்கப் அளவு ஷியா வெண்ணையை எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் மூன்று வைட்டமின் ஈ கேப்ஸ்யூல்கள், 2 டேபிள் ஸ்பூன் அளவு எலுமிச்சை சாறு ஆகியவற்றையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஷியா வெண்ணையை வெதுவெதுப்பாக சூடு படுத்த வேண்டும். இப்போது அந்த ஷியா வெண்ணையில் வைட்டமின் ஈ கேப்ஸ்யூல்களை சேர்க்க வேண்டும். அதன் பிறகு எலுமிச்சை சாறு சேர்க்க வேண்டும். இந்த கலவையை 15 நிமிடங்கள் வரை நன்றாக கலக்க வேண்டும். அவ்வாறு கலக்கும் போது கிரீம் பதத்திற்கு வரும். இதனை காற்று புகாத பாட்டிலில் ஊற்றி அடைத்து வைக்க வேண்டும்.பருக்களால் ஏற்பட்ட தழும்புகள் மறைய வேண்டுமா?.... இதை செய்யுங்கள்!

இந்த கிரீமை இரவு தூங்குவதற்கு முன்பாக முகத்தை நன்றாக கழுவி துடைத்தபின் சிறிதளவு எடுத்து தேய்க்க வேண்டும். இது முகத்தில் உள்ள தழும்புகளை குறைப்பது மட்டுமல்லாமல் நல்ல மாய்சுரைசராகவும் பயன்படுகிறது.

இருப்பினும் இம்முறையை ஒருமுறை பயன்படுத்தி பார்த்துவிட்டு எந்தவித ஒவ்வாமையும் ஏற்படவில்லை என்றால் தேவைப்படும் சமயங்களில் பயன்படுத்தலாம் இல்லையென்றால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.

MUST READ