Homeசெய்திகள்எண்ணூர் முகத்துவாரம் பகுதியில் 6-வது நாளாக எண்ணெய் கழிவுகள் அகற்றும் பணி தீவிரம்

எண்ணூர் முகத்துவாரம் பகுதியில் 6-வது நாளாக எண்ணெய் கழிவுகள் அகற்றும் பணி தீவிரம்

-

எண்ணெய் கழிவுகளால் பாதிக்கப்பட்டுள்ள எண்ணூர் பகுதி மீனவ கிராமங்கள் இயல்பு நிலைக்கு திரும்ப 6 மாத காலமாகும் என மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

எண்ணூர் முகத்துவாரம் பகுதியில் 6-வது நாளாக எண்ணெய் கழிவுகள் அகற்று பணி நடைபெற்று வருகிறது. எண்ணூர் முகத்தூவாரம் பகுதிகளில் படிந்துள்ள எண்ணெய் கழிவுகளை அகற்ற வேண்டும் என தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ள நிலையில் எண்ணெய் கழிவுகள் அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.100 படகுகளில் 400க்கும் மேற்பட்டோர் எண்ணெய் கழிவுகள் அகற்றும் பணியில் மீனவர்கள் மற்றும் சிபிசிஎல் நிறுவன ஊழியர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

எண்ணூர் முகத்துவாரம் பகுதியில் 6-வது நாளாக எண்ணெய் கழிவுகள் அகற்றும் பணி தீவிரம்

 

எண்ணூர் முகத்துவாரம், எண்ணூர் மேம்பாலம், காட்டுப்பாக்கம் பகுதியில் எண்ணெய் தடுப்பான்கள் அமைக்கப்பட்டு எண்ணெய் படலங்களை அகற்ற ஒடிசா மாநிலம் பாதிப்பிலிருந்து அதி திறன் கொண்ட ஸ்கிம்மர் இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. எண்ணெய் கழிவுகளை அகற்ற மும்பையிலிருந்து வருகை தந்த சிறப்பு நிபுணர் குழுவினர் கரையோரங்களில் உள்ள எண்ணெய் கழிவுகள் கலந்த குப்பைகள் மற்றும் செடிகளை அகற்றி கரையோரங்களை சரி செய்து வருகின்றனர்.

சிபிசிஎல் நிறுவனத்துடன் எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வரும் மீனவர்கள் பேசுகையில் எண்ணூர் முகத்துவாரத்தில் எண்ணெய் கழிவுகள் கலந்துள்ளதால் தங்களது வாழ்வாதாரம் கடுமையாக பாதுக்கப்பட்டுள்ளது. தண்ணீரில் படந்துள்ள எண்ணெய் கழிவுகளை அகற்றினாலும் தண்ணீருக்கு அடியில் உள்ள மணல் பரப்பில் கலந்துள்ள எண்ணெய் கழிவுகளை அகற்றுவது கடினம் என தெரிவித்த மீனவர்கள், 8 கி.மீ வரை எண்ணெய் கழிவுகள் தேங்கியுள்ளதால் தங்களது வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த கழிவுகள் முழுமையாக விலகி இயல்பு நிலைக்கு திரும்ப 6 மாத காலம் வரை ஆகும் என்பதால் எண்ணூர் கழிமுகம் பகுதியை நம்பி மீன் பிடிக்கும் மீனவ கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் இப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு சுவாச பிரச்சனை மற்றும் தோல் நோய் பிரச்சனை உள்ளதாகவும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

MUST READ