Homeசெய்திகள்அரசியல்கூட்டணி முறிவு 2 கோடி தொண்டர்களின் உணர்வு - எடப்பாடி பழனிசாமி

கூட்டணி முறிவு 2 கோடி தொண்டர்களின் உணர்வு – எடப்பாடி பழனிசாமி

-

கூட்டணி முறிவு 2 கோடி தொண்டர்களின் உணர்வு – எடப்பாடி பழனிசாமி

பாஜகவுடன் இனி கூட்டணி இல்லை என தெளிவாக கூறிவிட்டேன், 2 கோடி தொண்டர்களின் உணர்வை மதித்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Image

எடப்பாடி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ₹2.72 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்ட பணிகளை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “கூட்டணி தொடர வேண்டும் என பாஜக மாநில துணைத் தலைவர் வி.பி.துரைசாமி கூறியது அவரது சொந்தக் கருத்து, அதுக்கு நாங்கள் என்ன சொல்ல முடியும்? பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகுவதால அறிவித்ததில் மாற்றமில்லை.

அதிமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இணையும் என பொறுத்திருந்து பாருங்கள்.. வரும் மக்களவைத் தேர்தலில் அதிமுக அமைக்கும் கூட்டணி 40 தொகுதிகளிலும் மாபெரும் வெற்றியைப் பெறும். அதிமுக தலைமையிலான கூட்டணி புதுவையுடன் சேர்த்து 40 தொகுதிகளிலும் வெல்வோம். பல தொகுதிகளில் குறைவான வாக்கு வித்தியாசத்திலேயே அதிமுக தோல்வியடைந்துள்ளது. பாஜகவுடன் இனி கூட்டணி இல்லை என தெளிவாக கூறிவிட்டேன், 2 கோடி தொண்டர்களின் உணர்வை மதித்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதிமுக எம்எல்ஏக்கள் தங்களது கடமையை நிறைவேற்றவே மத்திய நிதியமைச்சரை சந்தித்தனர். தமிழ்நாடு பாஜக தலைவரை மாற்ற வேண்டும் உள்ளிட்ட, எந்த கோரிக்கையையும் வைக்கவில்லை.

தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் அடிப்படையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியது. திமுக அரசு 10% வாக்குறுதிகளை கூட நிறைவேற்றவில்லை. தமிழ்நாட்டிற்கு வரும் மத்திய அமைச்சர்களின் நிகழ்ச்சிகளில் திமுகவினரும் பங்கேற்கின்றனர். I.N.D.I.A கூட்டணி என்பதே நாடகம்தான், இன்னும் முழு வடிவம் பெறவில்லை” என்றார்.

MUST READ