Homeசெய்திகள்அரசியல்சாட்டையடி போராட்டத்தை விமர்சித்து, சமூக வலைதளத்தில் அண்ணாமலைக்கு விழும் ”சாட்டையடி”

சாட்டையடி போராட்டத்தை விமர்சித்து, சமூக வலைதளத்தில் அண்ணாமலைக்கு விழும் ”சாட்டையடி”

-

- Advertisement -

களத்தில் அதிரடி அறிவிப்புடன் பரபரப்பான அரசியல் செய்யும் அண்ணாமலையை பந்தாடும் நெட்டிசன்கள். சாட்டையடி போராட்டம் ”வேண்டாம் வேண்டாம்” என்று சைர்னாக ஒலித்தவர்கள், சாட்டையடி போராட்டத்தின்போது ”உனக்கு இதுவும் வேணும், இன்னுமும் வேணும்” என்பது போல சைலண்டாக வேடிக்கை பார்த்த நிர்வாகிகள் மீதும் பாய்ந்த விமர்சனம். உடலை வருத்தி நடத்தப்பட்ட சாட்டையடி போராட்டத்தினால் கேளிக்கைக்கு உள்ளாகி, மனதை வருத்தி கொள்ளும் வகையில் அண்ணா-மலையை குடையும் விமர்சன உளிகள்.சாட்டையடி போராட்டத்தை விமர்சித்து, சமூக வலைதளத்தில் அண்ணாமலைக்கு விழும் ”சாட்டையடி”

தமிழ்நாடு அரசியல் களத்தில் சமீப காலமாக பெரும் பரபரப்பான அறிவிப்புகளையும், அரசியல் நகர்வுகளையும் மேற்கொள்பவர், தமிழ்நாடு மாநில பாஜகவின் தலைவர் அண்ணாமலை. அண்ணாமலை அரசியலில் அடி எடுத்து வைத்த நாள் முதலே, அவர் மேற்கொள்ளும் ஒவ்வொரு  நடவடிக்கையும் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகின்றன. அந்த வரிசையில் முதலிடம் பிடித்திருக்கிறது ”சாட்டையடி போராட்டம்” .

நேற்று முன்தினம் பாஜக தலைவர் அண்ணாமலை கோவையில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில், “திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை காலணி அணிய மாட்டேன். அண்ணா பல்கலைக்கழகம் மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம், திமுகவை கண்டித்து தனக்கு தானே சாட்டையடி அடித்துக் கொள்ள போகிறேன்” என அறிவித்தார். சற்றும் எதிர்பாராத தொண்டர்கள் அண்ணாமலை அறிவிப்பை வியப்புடனும் அதிர்ச்சியுடனும் பார்த்தனர் . அறிவித்த உடனே, தான் அணிந்திருந்த விலை உயர்ந்த காலணியை கழட்டி கேமராக்கள் முன் காண்பித்துவிட்டு, வெறுங்காலில் நடையை கட்டினார்.சாட்டையடி போராட்டத்தை விமர்சித்து, சமூக வலைதளத்தில் அண்ணாமலைக்கு விழும் ”சாட்டையடி”

அதன் பின்னர், திட்டமிட்டபடி சாட்டையடி போராட்டம் நடத்தப்படும் என அண்ணாமலை தெரிவித்தார் . உடனே பாஜக மாநில பொருளாளர் எஸ். ஆர். சேகர் உள்ளிட்டோர் மட்டுமின்றி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள், அண்ணாமலை சாட்டையடி போராட்டம் நடத்தி தன்னை வருத்திக் கொள்ள வேண்டாம் என வலியுறுத்தினர் . ஆனால், அண்ணாமலை திட்டமிட்டபடி நேற்று காலை 10 மணிக்கு, பச்சை வேட்டி பச்சை துண்டுடன் நேரு நகரில் உள்ள அவர் வீட்டு வாசலில் சாட்டையடி நூதன போராட்டத்தினை நடத்தினார். சாட்டையடி போராட்டத்தை விமர்சித்து, சமூக வலைதளத்தில் அண்ணாமலைக்கு விழும் ”சாட்டையடி”

சாட்டையடி போராட்டத்தின் மூலம் தமிழ்நாடு அரசியல் களத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்த நினைத்த அண்ணாமலைக்கு, இந்த சாட்டையடி போராட்டம் அவருக்கு எதிரான அலையை ஏற்படுத்தியிருக்கின்றது. தடிமனான சாட்டையில் தன்னை அடிக்க மறுத்து, லேசான வலி குறைவாக விழும் சாட்டையை அண்ணாமலை பயன்படுத்தியது, லேசான பஞ்சு போன்ற மென்மையான சாட்டையில் அடித்துக்கொள்ளும்போது ”சுளீர் சுளீர்” என பளீரென்று ஒலிக்காத சாட்டை அடி சத்தம்,  ஒலி எழுப்பாத வலி தராத சாட்டை அடிக்கே அண்ணாமலை தந்த ”ஐயோ வலிக்குதே” போன்ற ஆக்ஷன் எல்லாம், ஹெவியான ஆப்போசிட் ரியாக்சனுக்கு வழிவகை செய்திருக்கின்றது.  சாட்டையடி போராட்டத்தை விமர்சித்து, சமூக வலைதளத்தில் அண்ணாமலைக்கு விழும் ”சாட்டையடி”

பசியோடு காத்திருந்த யானைகளுக்கு கரும்பு தோட்டங்கள் கண்ணில் பட்டது போல, மீம் பசியில் காத்திருந்த நெட்டிசன்களுக்கு அண்ணாமலை சாட்டையடி போராட்ட வீடியோ விருந்தாகவே அமைந்தன. அண்ணாமலை சீரியசாக (!) சாட்டையால் அடித்துக்கொண்ட வீடியோக்கள் சமூக வலைதளங்களில் சிரிப்புக்கான கண்டண்டாக சமூக வலைதளங்களில் மாறின. பல திரை பட காட்சிகளுடன் அண்ணாமலையை பொறுத்தி வெளியிட்ட வீடியோக்கள் மில்லியன் வியூவ்களுக்கு வித்திட்டிருக்கின்றன. சாட்டையடி போராட்டத்தை விமர்சித்து, சமூக வலைதளத்தில் அண்ணாமலைக்கு விழும் ”சாட்டையடி”

பல யூடியூப் சேனல்கள் இந்த ஒரு வீடியோவால், மானிடைசேஷன் அளவுக்கு பார்வையாளர்களின் நேரத்தை பெற்றிருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. சினிமாக்களில் உள்ள பல நகைச்சுவை சாட்டையடி வீடியோக்களை, அண்ணாமலை முகத்துடன் ரீ கிரியேட் செய்த நெட்டிசன்கள், சீரியசான அண்ணாமலையையே சிரிப்பூட்டும் விதமாக மீம்களை பறக்க விட்டிருக்கின்றனர் . சாட்டையடி போராட்டத்தினை சட்டையர் வீடியோக்களாக நெட்டிசன்கள் வெளியிட்டு, அண்ணாமலையை வறுத்தெடுப்பது ஒருபுறம் இருக்கையில், சாமானியர்களும் சளைத்தவர்கள் என்பது போல, ”சாட்டை அடி என்றால் எப்படி இருக்கும்னு தெரியுமா” என பொதுமக்களும் சாட்டையடி நடத்தி அண்ணாமலையை வெறுப்பேற்றி இருக்கின்றனர் .சாட்டையடி போராட்டத்தை விமர்சித்து, சமூக வலைதளத்தில் அண்ணாமலைக்கு விழும் ”சாட்டையடி”

பெரியவர்கள் ஒருவரும் சாட்டையால் அடித்துக் கொண்டு கிண்டல் செய்யும் வீடியோக்களை வெளியிடுகின்ற நிலையில், வாண்டுகளும் அண்ணாமலையை காண்டேத்தும் வகையில் சாட்டை எடுத்து சுழற்றும் வீடியோ சமூக வலைதளங்களில், சட்டையர் விரும்பிகளுக்கு விருந்தாகவே அமைந்திருக்கின்றன . இதில் ஒரு படி மேலே போய் பாஜக தலைவர் அண்ணாமலை வழியில் சில தொண்டர்களும் சாட்டையால் சீரியஸாக அடித்துக் கொண்ட சம்பவம் சிரிப்பை ஏற்படுத்திருக்கின்றன. அதிலும் உச்சமாக பாஜகவின் பிரச்சார பீரங்கியான கூல் சுரேஷ் சாட்டையால் அடித்துக் கொண்ட சம்பவம் அண்ணாமலைக்கு கோபத்தையே ஏற்படுத்தி இருக்கும் என்றால் மிகை அல்ல.சாட்டையடி போராட்டத்தை விமர்சித்து, சமூக வலைதளத்தில் அண்ணாமலைக்கு விழும் ”சாட்டையடி”

ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றியபோது தனது நடவடிக்கையின் மூலம் சிங்கம் என்று அழைக்கப்பட்ட அண்ணாமலை , அரசியல் களத்தில் சாட்டையடி போராட்டத்தால் கோமாளி, பஃபூன், ஜோக்கர், டுமீல், முத்தி போச்சு  போன்ற கடும் சொற்களால், அண்ணாமலையை காட்டு காட்டுனு காட்டும் விமர்சனங்களே கமண்டு செக்ஷன்களில் கண்களில் காண முடிகின்றன . அண்ணாமலை அனுதாபிகள் மட்டுமின்றி எதிர்க்கட்சிக்காரர்களுக்கே அண்ணாமலை மீது பரிதாபப்படும் அளவுக்கு கமெண்டுகள் சமூக வலைதளங்களில் பறக்க விடப்பட்டிருக்கின்றன.சாட்டையடி போராட்டத்தை விமர்சித்து, சமூக வலைதளத்தில் அண்ணாமலைக்கு விழும் ”சாட்டையடி”

சாட்டையடி போராட்டத்தின் மூலம் அரசியல் களத்தில் அண்ணாமலை அதிர்வலைகளை ஏற்படுத்த நினைத்தார். ஆனால், நெனப்பு தான் பொழப்ப கெடுத்தும் என்ற வாசகத்துக்கு இணங்க, அண்ணாமலை ஏற்படுத்திய அதிர்வலை, அவருக்கு எதிரான அதிர்ச்சி வலையாகவே மாறியிருக்கின்றன . கடும் விமர்சனங்களுடன் நெட்டிசன்களின் நகைப்புக்குள்ளான மீம்களால், சாட்டையடி போராட்டத்தின் நோக்கம் சிதறி, அண்ணாமலை பதறி ஓடும் அளவுக்கு பெரும் தாக்கம் ஏற்படுத்தியிருக்கின்றது.

அண்ணாமலை மீதான விமர்சனங்கள் ஒருபுறம் இருக்க, கட்சி நிர்வாகிகள் மீதும் விமர்சன பார்வை விழுந்திருக்கின்றன. சாட்டையடி போராட்டத்தினை நடத்துவதாக அண்ணாமலை அறிவித்தவுடன், ”வேண்டாம் அண்ணா, வேண்டாம் அண்ணா” என்று சொன்ன நிர்வாகிகள், சாட்டையால் அண்ணாமலை அடித்துக்கொள்ளும்போது, ”உனக்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும்” என்பது போல ”வேடிக்கை” பார்த்து நின்றனர். வேண்டாம் வேண்டாம் என்று சைரன் போல ரிப்பீட் மோடில் ஒலித்தவர்கள், அண்ணாமலை சாட்டையால் அடித்துக்கொள்ளும்போது அப்பீட் ஆனது போல, சைலண்டாக ”வேடிக்கை” பார்த்தனர் . திட்டமிட்ட 6 அடிக்கு மேல் 8 அடி அடித்துக்கொண்ட அண்ணாமலையை, அங்கிருந்தவர்களில் நந்தகுமார் என்பவர் மட்டுமே வந்து தடுத்து அண்ணாமலையை ஆசுவாசப்படுத்தினார் . பிறக்கு மற்றவர்கள் பெயரளவில் வந்து அண்ணாமலைக்கு ஆறுதல் சொல்லியிந்தனர் . இதுவும் விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கின்றன.

சாட்டையடி போராட்டத்தை விமர்சித்து, சமூக வலைதளத்தில் அண்ணாமலைக்கு விழும் ”சாட்டையடி”

பாஜக தலைவர்களில் பரபரப்பான அதிரடி அரசியலுக்கு பெயர் போனவர் அண்ணாமலை என்றாலும், அவர் பெயரே போகும் அளவுக்கு, தேவையற்ற பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றாரோஅண்ணாமலை என, கட்சிக்காரர்களே கடுப்பாகி முனுமுனுக்கும் அளவுக்கு, அமைந்திருக்கின்றது சாட்டையடி போராட்டம். சீரியசாக நடந்துகொண்ட அண்ணாமலையின் அதிரடி போராட்டம் சிரிப்பையே தந்திருப்பதனால், இனியாவது சிந்தித்து சிறப்பான அரசியல் செய்வாரா என எதிர்கட்சிகள் மட்டுமல்ல, சொந்த கட்சிகாரர்களின் எதிர்பார்ப்பாகவுமே அமைந்து இருக்கின்றன . மொத்தத்தில், இந்த இந்த சாட்டையடி போராட்ட பாடம் (படம்) எப்படி இருக்குன்னா, ” சாட்டையடி போராட்டம் நடத்திய அண்ணாமலை, உடம்ப வருத்திக்கிட்டாரோ இல்லையோ மனச வருத்திக்கிட்டாருன்னு தான் சொல்லனும்”.

2026ல் மீண்டும் மக்கள் என்னை தோற்கடித்தாலும் ஏற்றுக்கொள்வேன் – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

 

MUST READ