Homeசெய்திகள்அரசியல்'என்னையா தெர்மாகோல்னு ஓட்டுறீங்க..?- பொங்கி எழுந்து செல்லூர் ராஜு எடுத்த அதிரடி..!

‘என்னையா தெர்மாகோல்னு ஓட்டுறீங்க..?- பொங்கி எழுந்து செல்லூர் ராஜு எடுத்த அதிரடி..!

-

- Advertisement -

மதுரை மாநகரின் மேற்கு தொகுதியில் எம்.எல்.ஏ.,வாக இருக்கும் அதிமுக முன்னாள் அமைச்சர் இப்போதெல்லாம் அவரது தொகுதிக்குள் அதிகமாக தலைகாட்டுவது இல்லை என்கிறார்கள்.எந்த வளர்ச்சி பணிகளும் செய்யாததால் தொகுதிக்குள் கடுமையான எதிர்ப்பு அலை ஏற்பட்டுள்ளது. இந்த தொகுதிக்குள் அதிமுகவினர் மட்டுமின்றி, ஓ.பி.எஸ்- டி.டி.வி.தினகரன் தரப்பினர் கணிசமாக இருக்கின்றனர்.

sellur raju

இவர்களை கடந்த தேர்தலில் சரி கட்டியதால்தான் சென்ற முறை செல்லூர் ராஜுவால் வெற்றி பெற முடிந்தது. தற்போது இந்த வாக்குகள் கணிசமாக குறைந்ததுடன், இவர் மீதான அதிருப்தியும் தொகுதிக்குள் அதிகரித்துள்ளது என்கிறார்கள். இதனால், வரும் தேர்தலில் தோல்வி தான் மிஞ்சும் என சர்வேயில் தெரிய வந்துள்ளது. இதனால், மதுரை மாநகரில் வடக்கு அல்லது தெற்கு ஆகிய தொகுதிகளில் ஏதாவது ஒன்றிற்கு மாறிவிடலாம் என முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், மதுரை மாநகராட்சி மாமன்றத்தின் 36 மாமன்ற கூட்டம் மேயர் இந்திராணி பொன்.வசந்த் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில்,செல்லூர் கே.ராஜு சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார். அப்போது, “பொறுத்தது போதும் பொங்கி எழு என மனோகரா படத்தில் வரும் வசனம் போல நான் மாநகராட்சி கூட்டத்திற்கு வந்துள்ளேன். கோயில் மாநகர் குப்பை நகராக வருகிறது. என் சட்டமன்ற தொகுதிக்குள் 22 வார்டுகள் உள்ளது. மாநகராட்சி பகுதிக்குள் சென்றால் இடுப்பு எலும்பு ஒடிந்து விடுகிறது.

"பென்னிகுவிக் கல்லறையை சீரமைக்க நிதி திரட்டப் போகிறேன்"- செல்லூர் ராஜு அதிரடி!

மீனாட்சிக்கு 6 மாதம் மட்டுமே ஆட்சி, மேயர் 5 ஆண்டுகள் ஆட்சி புரிகிறார். அம்ரூத் திட்டத்தின் நிலை என்ன? குடிநீர் எப்போது வினியோகம் செய்யப்பட உள்ளது. வரி கட்டாதவர்களிடம் சாட்டையை சுழற்றி மேயர் வரிகளை வசூலிக்க வேண்டும். அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதல் உயரத்தில் கட்டடம் கட்டியவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

என்னை தெர்மாகோல் என ஓட்டுகிறார்கள். மக்களின் குடிநீர் பிரச்னையை தீர்க்க பரிச்சாத்த முறையில் தெர்மாகோல் விட்டு ஆய்வு செய்தோம். வைகையாற்றில் இருந்து தெப்பக்குளத்திற்கு தண்ணீர் கொண்டு செல்ல வேண்டும். மதுரை மாநகராட்சிக்கு சிறப்பு நிதி கேட்டுப் பெற வேண்டும். வைகையாற்றில் கழிவு நீர் கலப்பதால் மிக மோசமான நிலைக்கு சென்று கொண்டு இருக்கிறது”என அவர் தெரிவித்தார்.

MUST READ