spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்"நீட் தேர்வை வைத்து அரசியல் செய்வதா?"- அண்ணாமலை

“நீட் தேர்வை வைத்து அரசியல் செய்வதா?”- அண்ணாமலை

-

- Advertisement -

“நீட் தேர்வை வைத்து அரசியல் செய்வதா?”- அண்ணாமலை

ஆளுங்கட்சியாக வந்த பிறகும் நீட் தேர்வை வைத்து திமுக அரசியல் செய்வதா? என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

நானும் துலாவிப்பார்த்தேன்; முதல்வர் வாயை திறக்கவே இல்லை - அண்ணாமலை தாக்கு

கன்னியாகுமரியில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, வன்முறையை தூண்டும்படி எடுக்கும் படங்களை முதலமைச்சர் பாராட்டுகிறார். ரெட் ஜெயண்ட் மற்றும் உதயநிதி ஆகியோர் சாதிய ரீதியாக படம் எடுக்கிறார்கள். பல்வேறு இடங்களில் சாதிய வன்மத்தை தூண்டும் வகையில் பல படங்கள் எடுக்கப்படுகின்றன. இதற்கு எதிராக கடுமையான சட்டங்களை உருவாக்க வேண்டும்.

we-r-hiring

நீட் தேர்வை பொருத்தவரை தமிழகத்தைச் சேர்ந்த மாணவ மாணவிகள் தான் இந்தியாவில் அதிக மதிப்பெண்களை பெற்றுள்ளனர். நீட் தேர்வு திமுகவுக்கு மட்டும் தான் எதிரி, அதை வைத்து அவர்கள் அரசியல் செய்கின்றனர். நீட் யாருக்கு எதிரானது என்பதை புள்ளி விவரங்களை வெளியிட்டு விளக்க வேண்டும். எல்லா தரப்பு மக்களும் நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவம் படித்து வருகின்றனர். நீட் தேர்வால் மீண்டும் உயிரிழப்பு ஏற்பட்டால் அதற்கு திமுக தான் பொறுப்பு” என்றார்.

MUST READ