சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார், விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் அதிமுக போட்டியிட்டால், டெபாசிட் இழக்கும் என வெளியான கருத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
விக்ரபாண்டி இடைத்தேர்தலில் அதிகார துஷ் பிரயோகம் நடக்கும் என கருதியே, இந்த தேர்தலை அதிமுக புறக்கணிக்கிறது என்று ஜெயக்குமார் குறிப்பிட்டடுள்ளார்.
காலம் காலமாக இரட்டை இலைக்கு ஓட்டு போட்ட கைகள் மாறவே மாறது என்றும் தேர்தலை அதிமுக புறகணிப்பு செய்வதால், மக்களும் புறகணிப்பார்கள் என அவர் கூறியுள்ளார்.
ஜெயக்குமாரிடம் சசிகலாவின் பேச்சு குறித்து செய்தியாளர்கள் கேட்கப்பட்ட கேள்விக்கு
சசிகலாவுக்கும் அதிமுகவுக்கும் என்ன சம்பந்தம் என்ற வினாவையே பதிலாக அளித்துள்ளார். அதிமுகவில் மீண்டும் ENTRY என்று சசிகலா சொன்னாலும் அவருக்கு, ஏற்கனவே EXIT கொடுக்கப்பட்டு விட்டது என்று ஜெயக்குமார் கூறினார். ஜாதி, மதம் வேறுபாடு இல்லாமல் இருக்கும் கட்சி அதிமுக என்றும் கட்சியில் அனைவரும் சமம் என்ற நிலையே இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அண்ணாமலை மாற்றப்பட்டால் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைக்குமா ? என்ற கேள்விக்கு,
பாஜகவுடன் கூட்டணியே இல்லை என உறுதிபட தெரிவித்த ஜெயக்குமார், அண்ணாமலையை மாற்றம் செய்தாலும் சரி, பின்லேடனே வந்தாலும் சரி பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று திட்டவட்டமாக பதில் அளித்துள்ளார்.
முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜனை உள்துறை அமைச்சர் அமித்ஷா மேடையில் நடத்திய விதத்தை பற்றி கருத்து கூறிய ஜெயக்குமார்,
பொது மேடையில் அமித்ஷா கோபமாக பேசியது போலத்தான் தெரிந்ததாகவும் அப்படி ஒரு பெண்ணை பொது வெளியில் நடத்தியது தவறு என்றும் கண்டனம் தெரிவித்தார்.நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு அதிமுக காணாமல் போகும் என்ற அண்ணாமலையின் பேச்சுக்கு, என்ற கேள்விக்கு
அவர் தான் புள்ளி விவரம் கொடுக்கும் புள்ளி ராஜாவாச்சே என விமர்சித்த ஜெயக்குமார், தைரியம் இருந்தால் இந்த தேர்தலில் பாஜக தனித்து நின்று வாக்கு சதவீதத்தை உயர்த்தி காட்டட்டும் என சவால் விடுத்துள்ளார்.
பா.ம.க. ராமதாஸ், ஓ.பி.எஸ்., ஏ.சி.சண்முகம், டி.டி.வி., ஜான் பாண்டியன் என்று பலருடன் கூட்டணி அமைத்தே, வாக்குகளை பெற்றுள்ளதாகவும் எத்தனை தேர்தல் வந்தாலும் பாஜகவின் வாக்கு சதவீதம் தமிழகத்தில் உயரவே உயராது என்றும் அவர் உறுதியாக கூறியுள்ளார்.
“அண்ணாமலை வருகைக்கு பிறகு தான் பாஜக குற்றவாளிகளின் கூடாரமாக மாறி விட்டது” என்றும் ஜெயக்குமார் காட்டமாக விமர்சித்துள்ளார்.