பீகாரில் நடைபெற்ற சட்டசபை இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. நான்கு தொகுதிகளிலும் வெற்றி பெற்று தேசிய ஜனநாயக கூட்டணி பலத்தை அதிகரித்துள்ளது.
இந்த வெற்றியின் மூலம் ஒருங்கிணைந்த ஜனதா தள், பாஜக,, ஹிந்துஸ்தானி ஆவம் மோர்சா ஆகிய கட்சிகளின் எம்எல்ஏக்களின் பலம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், நிலையில், ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் கட்சிகளுக்கு தோல்வி ஏற்பட்டுள்ளது. தேர்தலுக்குப் பிறகு, 243 உறுப்பினர்களைக் கொண்ட பீகார் சட்டசபையில் இப்போது தேசிய ஜனநாயக கூட்டணி 137 எம்எல்ஏக்களைக் கொண்டுள்ளது, அதே நேரத்தில் எதிர்க்கட்சி 106 எம்எல்ஏக்களுடன் உள்ளது.
ராம்கர், தராரி தொகுதிகளில் வெற்றி பெற்றதன் மூலம், 80 எம்எல்ஏக்களுடன் பாஜக தற்போது மக்களவையில் மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. அதே நேரத்தில், பெலகஞ்ச் தொகுதியில் வெற்றி பெற்றதன் மூலம், ஜேடியு எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 45 ஆக உயர்ந்துள்ளது. ஜிதன் ராம் மஞ்சி எம்பி ஆன பிறகு காலியான இமாம்கஞ்ச் தொகுதியில் அவரது மருமகள் தீபா மஞ்சி வெற்றி பெற்று,ஹிந்துஸ்தானி ஆவம் மோர்ஷா தனது கட்சி எம்எல்ஏக்களின் எண்ணிக்கையை நான்காக உயர்த்தியுள்ளது.

தற்போது ஆர்ஜேடிக்கு 77 எம்எல்ஏக்களும், காங்கிரசுக்கு 19 எம்எல்ஏக்களும் உள்ளனர். ஆனால் தனித்து இயங்கும் எம்எல்ஏக்களை தவிர்த்தால், ஆர்ஜேடிக்கு 73 எம்எல்ஏக்களும், காங்கிரசுக்கு 17 எம்எல்ஏக்களும் உள்ளனர். பீகார் சட்டசபையில் மொத்தம் 243 இடங்கள் உள்ளன. இதில் பாஜக 80, ஆர்ஜேடி 77, ஜேடியு 45, காங்கிரஸ் 19, சிபிஐ (எம்எல்) 11, எச்ஏஎம் 4, சிபிஐ (எம்) 2, சிபிஐ 2, ஏஐஎம்ஐஎம் 1 மற்றும் 2 சுயேச்சை எம்எல்ஏக்கள் உள்ளனர் .