மகாராஷ்டிராவில் மஹாயுதி கூட்டணி மீண்டும் மாபெரும் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. ஹேமந்த் சோரன் மீண்டும் ஜார்கண்டின் முதல்வராகி இருக்கிறார். இந்த மாநிலங்களிலும் கடந்த முறை அவர்கள் வெற்றி பெற்றதை விட இம்முறை இன்னும் அதிக இடங்களில் வெற்றிபெற்றுள்ளனர். இதற்கு பெண்களுக்கு மாதந்தோறும் அறிவித்த உதவித் தொகை.
மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் ‘லாட்லி பஹின் யோஜனா’ திட்டத்தின் கீழ் வழங்கப்படும் 1500 ரூபாயில் இருந்து 2100 ரூபாயாக உயர்த்துவதாக மகாயுதி கூட்டணி உறுதியளித்தது. இதுதான் அந்த மாபெரும் வெற்றிக்கு காரணமே.
தமிழகத்தில் 200 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என தி.மு.க. இப்போதே கணக்குப் போட்டு காய் நகர்த்துகிறது. ஆனால், அந்தக் கணக்கு பலிக்க வாய்ப்பில்லை என்றும், தி.மு.க. சறுக்கலையே சந்திக்கும். அதற்கு மகாராஷ்டிரா தேர்தல் முடிவே ஒரு உதாரணம் என்கிறார்கள்.
தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் மகளிர் உதவித் தொகை திட்டம் நடைமுறையில் இருந்தாலும் மகாராஷ்டிரா பாஜக அரசு செயல்படுத்திய விதம், பெண்கள் வாக்குகளை மொத்தமாக அந்த கூட்டணி அடித்து அள்ளிச் சென்றது.
மகாராஷ்டிராவில் மொத்தம் உள்ள 288 சட்டசபை தொகுதிகளில் பாஜக தனித்தே 132 இடங்களில் வெற்றி பெற்றது. ஏக்நாத் ஷிண்டே சிவசேனா 57; அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் 41; உத்தவ் தாக்கரே சிவசேனா 20; காங்கிரஸ் 16; சரத்பவார் தேசியவாத காங்கிரஸ் 10 இடங்களில் வெற்றி பெற்றன. மகாராஷ்டிராவில் பெரும்பான்மைக்கு தேவை 145 இடங்கள். பாஜக கூட்டணியோ 230 இடங்களைக் கைப்பற்றி மிகப் பெரும் பலத்துடன் மீண்டும் ஆட்சியை அமைக்கிறது.
மகாராஷ்டிராவில் பாஜக பெற்ற முதலாவது பிரம்மாண்ட வெற்றி. 1972-ம் ஆண்டுக்குப் பின்னர் எந்த ஒரு கட்சி அல்லது கூட்டணி இத்தனை இடங்களை அள்ளியதும் கிடையாது. இதற்கு காரணமே பெண்களுக்கு மாதந்தோறும் நிதி உதவி வழங்கும் அன்பு சகோதரி திட்டம்.
மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தலுக்கு 3 மாதங்களுக்கு முன்னர்தான் பெண்களுக்கு மாதம் ரூ1,500 வழங்கும் நிதி உதவித் திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தை எப்படி செயல்படுத்தியது தெரியுமா? ஒரே கட்டமாக 5 மாத தவணை பணத்தை பெண்களில் வங்கிக் கணக்கில் செலுத்தியது பாஜக கூட்டணி அரசு. அதாவது சட்டசபை தேர்தலுக்கு 3 மாதங்களுக்கு முன்னர் ஒவ்வொரு பெண்களுக்கும் ரூ7,500 கொடுத்தது பாஜக அரசு. இந்தத் திட்டத்தில் விட்டுப் போன பெண்களையும் கணக்கில் எடுத்து ‘தகுதி’உள்ளவர்கள் என்கிற பாரபட்சம் எல்லாம் பார்க்காமல் லம்ப்பாக ரூ7,500 அரசுப் பணத்தை அள்ளிக் கொடுத்தது பாஜக கூட்டணி அரசு.
மகாராஷ்டிராவில் 4.70 கோடி பேர் பெண் வாக்காளர்கள். இவர்களில் 2.30 கோடி பேருக்கு ரூ7,500 பணத்தை ரொக்கமாகவே வங்கிக் கணக்கில் செலுத்திவிட்டது பாஜக கூட்டணி அரசு. அத்துடன் நிற்கவில்லை. எங்களுக்கு ஓட்டுப் போட்டால் இந்த தொகையை ரூ2,100 ஆகவும் உயர்த்துவோம் எனவும் தேர்தல் களத்தில் வாக்குறுதி அளித்தது. இது குடும்ப பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் அனைத்து குடும்பப் பெண்களுக்கும் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தி.மு.க. அறிவித்தது. ஆனால், ஆட்சியில் அமர்ந்த பிறகு தகுதியுள்ளவர்களுக்கு மட்டும்தான் ஆயிரம் கொடுக்கப்பட்டது. அதுவும் ‘தகுதி உள்ளவர்களுக்கு’கொடுக்கப்பட்டதா? என்றால் இல்லை.
ஒன்றியச் செயலாளர்கள் மற்றும் சேர்மன்கள் கிளர்க்குகளையும், வருவாய்த்துறை அதிகாரிகளையும் கைக்குள் போட்டுக்கொண்டு, கட்சிக்காரர்களுக்கு மட்டுமே மாதம் ஆயிரம் ரூபாய் கிடைக்குமாறு செய்துவிட்டனர். உண்மையிலேயே தகுதியான பலர் ஆயிரம் ரூபாய் பெற முடியாமலும், மீண்டும் மீண்டும் அந்தப் பணத்தை பெறுவதற்கு அலைந்து ஓய்ந்துவிட்டு விரக்தியில் உள்ளனர்.
மகாராஷ்டிராவில் அனைத்து குடும்ப பெண்களுக்கு பணம் கொடுக்கப்பட்டுவிட்டது. அடுத்து அதிகரித்து தருகிறோம் என்று ஆளும் கட்சி கூறியதை அடுத்து அப்படியே வரலாறு காணாத வெற்றியை ஆளும் பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெற்றது.
தமிழகத்தில் ஏற்கனவே அனைவருக்கும் கிடைக்கு என்று மு.க.ஸ்டாலின் அறிவித்தார். ஆனால், ‘தகுதி உள்ளவர்கள்’ என்று அறிவித்துவிட்டார்கள். தேர்தல் சமயத்தில் அனைவருக்கும் கிடைக்கும்… அடுத்து ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என்றாலும் மக்கள் நம்பமாட்டார்கள்.
காரணம், அனைவருக்கும் நகைக்கடன் தள்ளுபடி என அறிவித்த தி.மு.க., ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த பிறகு அதையும் தகுதி உள்ளவர்களுக்கு என அறிவித்தால், தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதியை தமிழக மக்கள் நம்பமாட்டார்கள். எனவே, மகாராஷ்டிராவிற்கு மாற்றாக தமிழகத்தில் தேர்தல் முடிவுகள் இருக்கும்’’ என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்