Homeசெய்திகள்அரசியல்அரசியல் நாகரிகத்தை பேண வேண்டும்: அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சுக்கு சிபிஐ கண்டனம்

அரசியல் நாகரிகத்தை பேண வேண்டும்: அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சுக்கு சிபிஐ கண்டனம்

-

- Advertisement -

அரசியல் களத்தில் உள்ளவர்கள் தனிப்பட்ட விமர்சனங்களைத் தவிர்த்து, அரசியல் நாகரிகத்தையும் உயர்ந்த பண்பாட்டையும் பேணிப் பாதுகாக்க வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஐ – CPI) தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்தியுள்ளது.
​இது தொடர்பாக அக்கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் விடுத்துள்ள அறிக்கை விபரம்:
சிபிஐ

முதலமைச்சர் குறித்த தனிப்பட்ட விமர்சனம் கண்டனத்திற்குரியது
​தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில், முன்னாள் அமைச்சரும் தற்போதைய சட்டமன்ற உறுப்பினருமான அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு முதலமைச்சரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து தரம் தாழ்ந்த முறையில் பேசியுள்ளார். இது வன்மையான கண்டனத்திற்குரியது.

we-r-hiring

அரசின் நடவடிக்கைகள் மற்றும் பிற அரசியல் கட்சிகளின் கொள்கை முடிவுகள் மீது விமர்சனங்களை முன்வைப்பதற்கும், கண்டிப்பதற்கும் அனைவருக்கும் உரிமை உண்டு. அது ஆரோக்கியமான ஜனநாயக நடைமுறைகளை வலுப்படுத்தும். அதை விடுத்து, பொதுவெளியில் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து தரம் தாழ்ந்து பேசுவது சட்ட அத்துமீறலாகும். அதன் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுப்பது அரசின் கடமை என்றாலும், தற்போதைய சட்டமன்ற உறுப்பினரை காவல்துறை பலவந்தமாக கைது செய்யும் அளவிற்கான தீவிர நடவடிக்கையைத் தவிர்த்திருக்க வேண்டும்.

​அமைச்சரின் பேச்சு ஏற்புடையதல்ல
​அதேபோல், கரூர் சம்பவத்தைச் சுட்டிக்காட்டி “கணக்கு தீர்க்காமல் விடமாட்டோம்” என்று தமிழ்நாடு அரசின் பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் தனது கட்சி கூட்டத்தில் பேசியிருப்பது எவ்வகையிலும் ஏற்கத்தக்கதல்ல. இது அவர் வகிக்கும் பொறுப்புக்குப் பெருமை சேர்க்காது என்பதை உணstatus வேண்டும்.

​”அரசியல் தளத்தில் நாகரிகத்தையும், உயர்ந்த பண்பாட்டையும் பேணிப் பாதுகாப்பதில், பொது வாழ்வில் உள்ள அனைவரும் அக்கறை காட்டுவது அவசியம்.” — மு.வீரபாண்டியன், மாநிலச் செயலாளர், CPI

​எனவே, அரசியல் தலைவர்கள் மற்றும் பொது வாழ்வில் இருப்பவர்கள் தங்களின் பேச்சில் கண்ணியத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக்கொண்டுள்ளது.

MUST READ