தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மக்களவை தேர்தலில் தோல்வி அடைந்தார். அதனை பாஜகவை சேர்ந்த எஸ்.வி.சேகர் பட்டாசு வெடித்து கொண்டாடினார் என்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் திமுக தலைமையில் ஒரு அணியாகவும், அதிமுக தலைமையில் ஒரு அணியாகவும், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் மாபெரும் கூட்டணி அமைத்து தனி அணியாகவும் மற்றும் நாம் தமிழர் கட்சி தனித்தும் என்றும் நான்கு அணியாக களத்தில் போட்டியிட்டது.
அதில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி தமிழகம், புதுச்சேரி ஆகிய 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. பல தொகுதிகளில் பாஜக தலைமையிலான கூட்டணி டெபாசிட் இழந்தது. கோவையில் போட்டியிட்ட அண்ணாமலை இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டார்.
அண்ணாமலை தோல்வி அடைவார் என்று தேர்தலுக்கு முன்பே நடிகர் எஸ்.வி.சேகர் கூறி வந்தார். இந்த நிலையில் நான் சொன்னது போலவே அண்ணாமலை தோல்வி அடைந்து விட்டார் என்று எஸ்.வி.சேகர் தெரிவித்தார். தற்போது அண்ணாமலையின் தோல்வியை பட்டாசு வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் எஸ்.வி.சேகர் கொண்டாடினார் என்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இது குறித்து பதிலளித்த எஸ்வி சேகர் அவர்கள் நான் மோடியின் வெற்றிக்காகவே பட்டாசு வெடித்து கொண்டாடினேன். அண்ணாமலையின் தோல்வியை பட்டாசு வெடித்து கொண்டாடவில்லை.அந்த அளவுக்கு அவர் ஒர்த்தான ஆளும் இல்லை என்று கூறி பதிலளித்துள்ளாா்.