கேரளா வயநாட்டில் பிரியங்கா போட்டியிடுவாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மக்களவைத் தேர்தலில் ரேபரேலி, வயநாடு ஆகிய 2 தொகுதியளில் ராகுல்காந்தி வெற்றி பெற்றார். அதில் வயநாடு தொகுதியை ராஜினாமா செய்வார் என்று எதிர்பாக்கப்படுகிறது. அந்த தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிடுவாரா என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்றது. ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை தேர்தல் நடந்து முடிந்து. அதனை தொடர்ந்து தேர்தல் முடிவுகள் ஜூன் 4 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் வெளியானது.
இந்த மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையில் NDA கூட்டணியும், காங்கிரஸ் கட்சி தலைமையில் இந்தியா கூட்டணியும் போட்டியிட்டது. அதில் காங்கிரஸ் கட்சி தணித்து 100 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி 235 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. பாஜக தணித்து 240 தொகுதிகளிலும் NDA கூட்டணி 293 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. பாஜக தலைமையில் கடந்த ஜூன் 9 ஆம் தேதி 3 ஆவது முறையாக நரேந்திர மோடி தலைமையில் ஆட்சி அமைக்கப்பட்டது.
மக்களவைத் தேர்தலில் ராகுல்காந்தி வயநாடு, ரேபரேலி ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டு வென்றுள்ளார். அதில் வயநாடு தொகுதியை ராகுல்காந்தி ராஜினாமா செய்து விட்டு ரேபரேலி தொகுதியின் எம்.பி.யாக பணியாற்ற உள்ளார். இதனையே கேரள மாநில காங்கிரஸ் தலைவர் கே. சுதாகரனும் வலியுறுத்தி உள்ளார்.
இதனை அடுத்து பிரியங்கா காந்தி வயநாடு இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.