Homeசெய்திகள்அரசியல்திமுக கூட்டணிக்கு க்ரீன் சிக்னல்… பிரேமலதா வைக்கும் டிமாண்ட் இதுதான்..!

திமுக கூட்டணிக்கு க்ரீன் சிக்னல்… பிரேமலதா வைக்கும் டிமாண்ட் இதுதான்..!

-

- Advertisement -

திமுக கூட்டணியில் சேரும் நோக்கில் தேமுதிக பொதுச்செயலர் பிரேமலதா, சமீப நாட்களாக தமிழக அரசின் நடவடிக்கைகளைப் பாராட்டி கூட்டணிக்கு அடிப்போட்டு வருகிறார்.

ஒரு காலத்தில் திமுகவை பின்னுக்குத் தள்ளி எதிர்கட்சி அந்தஸ்தைப்பெற்ற தேமுதிக இப்போது தேய்ந்து வருகிறது. சட்டமன்றத்தில் உறுப்பினர்கள் இல்லஒ. அதிமுக மூலம் ராஜ்யசபா மூலம் எம்.பி பதவியை பிடிக்கலாம் எனக் கணக்குப்போட்டால் எடப்பாடி பழனிசாமி ஏமாற்றி கைவிரித்து விட்டார். இப்படியே போனால் தேமுதிக தேயும் தேமுதிக ஆகிவிடும் என்று கணக்குப்போட்ட பிரேமலதா, மெல்ல தன் போக்கை மாற்றி திமுகவை பாராட்டி வருகிறார். சமீபத்தில் பிரேமலதாவின் பிறந்த நாளுக்கு மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார்.

பிரேமலதா விஜயகாந்த்

இந்நிலையில், 2026 சட்டமன்றத் தேர்தலில் இரட்டை இலக்கத்தில் தொகுதிகள், ராஜ்யசபா எம்.பி., பதவி கேட்டு, மூத்த அமைச்சர் ஒருவரிடம் பேசிய தகவலும் வெளியாகி உள்ளது. தேமுதிக, தற்போது வெள்ளி விழா ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. மக்களவை தொகுதி மறுவரையறை தொடர்பாக, முதல்வர் ஸ்டாலின் நடத்திய அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்று, அரசின் முடிவுக்கு தேமுதிக ஆதரவு தெரிவித்தது.

தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை வரவேற்பதாக பிரேமலதா தெரிவித்தார். பிரேமலதாவின் மன மாற்றத்திற்கு, திமுகவில் உள்ள மூத்த அமைச்சர் ஒருவர் நடத்திய கூட்டணி பேச்சுதான் காரணம் என்கிறார்கள்.

தே.மு.தி.க. வேட்பாளர் பட்டியல் வெளியானது!

இது குறித்து தேமுதிக நிர்வாகி ஒருவர், ”கடந்த தேர்தல்களில் திமுகவுடன் கூட்டணி அமைந்து இருந்தால், தேமுதிக-வுக்கு சட்டசபையிலும், மாநிலங்களவையிலும் பிரதிநிதித்துவம் கிடைத்திருக்கும். அதிமுக-விடம் போய் அனைத்து வாய்ப்புகளையும் இழந்து விட்டோம் என எண்ணுகிறார் பிரேமலதா.

மதிமுக, பொதுச்செயலர் வைகோவுக்கு, இந்த முறை மாநிலங்களை எம்.பி., பதவி வழங்குவதற்குப் பதிலாக, தேமுதிக-வுக்கு வழங்குவதன் வாயிலாக, நாயுடு சமுதாயத்தினரின் ஓட்டுகளை தக்க வைக்கும் வாய்ப்பு திமுக-வுக்கு இருக்கிறது. சட்டமன்றத் தேர்தலில், இரட்டை இலக்கத்தில் தேமுதிக-வுக்கு ‘சீட்’ கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது” என்கிறார்கள்.

MUST READ