spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்அதிமுக தொண்டர்களின் கருத்தை பிரதிபலிப்பேன்; யாரையும் அழைக்கவில்லை – செங்கோட்டையன்

அதிமுக தொண்டர்களின் கருத்தை பிரதிபலிப்பேன்; யாரையும் அழைக்கவில்லை – செங்கோட்டையன்

-

- Advertisement -

அதிமுக தொண்டர்களின் கருத்துகளை பிரதிபலிக்கும் விதமாகவே செப்டம்பர் 5 இல் மனம் திறந்து பெச உள்ளேன் என அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளாா்.அதிமுக தொண்டர்களின் கருத்தை பிரதிபலிப்பேன்; யாரையும் அழைக்கவில்லை – செங்கோட்டையன்அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகக் கடுமையான அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், தாம் விரைவில் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தப் போவதாக தெரிவித்துள்ளார்.

கோபி குள்ளம்பாளையம் தோட்டத்து இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,“செப்டம்பர் 5ஆம் தேதி காலை 9.15 மணிக்கு கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து என் கருத்தைத் தெளிவாகச் சொல்வேன். அது, அதிமுக தொண்டர்களின் மனநிலையை பிரதிபலிக்கும் விதமாகவே இருக்கும். நான் யாரையும் அழைக்கவில்லை; ஆதரவாளர்கள் விருப்பப்படி தானாகவே என்னுடன் வருகிறார்கள்” என தெரிவித்தார்.

we-r-hiring

கடந்த சில நாட்களாக எடப்பாடி பழனிசாமி – செங்கோட்டையன் இடையே கருத்து வேறுபாடுகள் தீவிரமடைந்து வரும் நிலையில், இந்த அறிவிப்பு அதிமுக வட்டாரத்தில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெப்சி, கோக், KFC, அவுட்…இந்திய பொருட்களுக்கு முன்னுரிமை

MUST READ