Homeசெய்திகள்அரசியல்தென் மாநிலங்களில் பாஜக நோட்டா-விற்கு கீழ் தான் வாக்கு பெறும்

தென் மாநிலங்களில் பாஜக நோட்டா-விற்கு கீழ் தான் வாக்கு பெறும்

-

- Advertisement -

தென் மாநிலங்களில் பாஜக நோட்டா – விற்கு கீழ் தான் வாக்கு பெறும்

ராஜிவ் காந்தி நினைவு நாளை முன்னிட்டு நாளை அனைத்து மாவட்டங்களிலும் காங்கிரஸ் சார்பில் அமைதி பேரணி நடைபெறும் – தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

தென் மாநிலங்களில் பாஜக நோட்டா - விற்கு கீழ் தான் வாக்கு பெறும்

சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் காங்கிரஸ் கவுன்சிலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை பேசுகையில், உத்திரபிரதேச மாநிலம் ஃபரூக்காபாத் தொகுதியில் ஒரு இளைஞர் பாஜகவுக்கு 8 முறை வாக்களித்து அதை வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.

தென் மாநிலங்களில் பாஜக நோட்டா - விற்கு கீழ் தான் வாக்கு பெறும்

எப்படியாவது குறுக்கு வழியில் வென்று விடலாம் என்று பாஜக ஜனநாயகத்துக்கு எதிரான வேலைகள் செய்து வருகின்றனர் என கூறினார்.

பிரதமர் நரேந்திர மோடி பொது கூட்டங்களில் பேசும்போது மீண்டும் மீண்டும் சில மாநிலங்களில் இலவச பேருந்து பயணத்தினால் மெட்ரோ ரயில் காலியாக இருக்கிறது என கூறுகிறார். மெட்ரோ ரயில் வருமானத்தை பார்க்கும் பிரதமர் பெண்களின் சமூக பொருளாதார முன்னேற்றத்தை பார்க்காமல் பெண்களுக்கு இலவச பேருந்து பயணத்தை விமர்சித்து பேசி வருகிறார்.

மேலும் பாஜக இந்திய அரசியலமைப்பு சட்டத்தை சிதைத்து உள்ளது எனவும்
ராகுல் காந்தி சிறந்த ஜனநாயக வாதி, உண்மையை பேசினால் பிரதமருக்கு புடிக்காது என்றார்.

தென் மாநிலங்களில் பாஜக நோட்டா - விற்கு கீழ் தான் வாக்கு பெறும்

அமராவதி ஆற்றின் நீர் பிடிப்பு பகுதியான சிலந்தை ஆற்றின் குறுக்கே கேரளா அரசு தடுப்பணை கட்டுவது குறித்த கேள்விக்கு, தமிழ்நாட்டின் உரிமைகள் ஒருபோதும் பாதிக்க கூடாது எனவும் தமிழ்நாட்டின் விவசாய பெருங்குடி மக்களுக்கு எந்த விதமான பாதிப்பும் வந்துவிடக்கூடாது. அதற்கு ஒன்றிய அரசும் நீதிமன்றமும் அதை கண்காணிக்க வேண்டும் என கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர் தென் மாநிலங்களில் பாஜக நோட்டா விற்கும் கீழ் தான் வாக்கு பெறும் என கூறினார்.

நாளை ராஜிவ் காந்தி நினைவு நாளை முன்னிட்டு அனைத்து மாவட்டங்களிலும் காங்கிரஸ் சார்பில் அமைதி பேரணி நடைபெறும் என செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.

MUST READ