சென்னை பல்லாவரம் காமராஜபுரம், மணல் மேடு பகுதிகளில் குடிநீரால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது குடிநீர் மாதிரிகள் கிங்ஸ் இன்ஸ்டியூட் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கபட்டுள்ளது.
எதிர்கட்சி தலைவர் பொதுவாகவே எந்த விஷயத்தை எடுத்தாலும் பதட்டத்தை ஏற்படுத்தும் வகையில் செய்திகளை சொல்வதும் தொடர்ந்து பதட்டமான சூழ்நிலையை உருவாக்குவதுமான செய்திகளை பதிவிடுவதுமே வாடிக்கையாக கொண்டு இருக்கிறார் என்று குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ஆறுதல் கூறிய பின்பு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேட்டி அளித்துள்ளார்.
தாம்பரம் மாநகராட்சி பல்லாவரம் அடுத்த காமராஜபுரம் மற்றும் பரங்கிமலை கண்டோன்மெண்ட் நிர்வாக பகுதிகுட்பட்ட மணல்மேடு கழிவு நீருடன் குடிநீர் கலந்ததால் அதனால் 30க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, வயிற்று போக்கு மற்றும் மயக்கம் போன்ற உடல் உபாதைகளால் பாதிக்கபட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் அவர்களுக்கு தற்போது தீவிர சிகிச்சையானது அளிக்கப்பட்டு வருகிறது, இதில் திருவேதி (54) என்ற முதியவரும் மோகன்ராஜ் என்பவரும் மருத்துவமனைக்கு கொண்டு வரும் வழியில் உயிரிழந்துள்ளனர்,
இதனையடுத்து தகவல் அறிந்து வந்த மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா,சுப்பிரமணியன் உள் நோயாளிகளாக சேர்க்கபட்டவர்களிடம் நலன் விசாரித்தார். மேலும் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.
பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி, தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன், ஆணையாளர் சீ.பாலச்சந்தர், குரோம்பேட்டை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் பழனிவேல்ராஜன் உள்ளிடோர் உடன் இருந்தனர்.
பின்பு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியம்,பல்லாவரம் மற்றும் ஆலந்தூர் பகுதிகளில் இருந்து கடந்த இரண்டு நாட்களாக வயிற்றுபோக்கு காரணமாக 33 பேர் தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு வந்து சென்றுள்ள்னர். இதில் 14 ங்கு பேர் புறநோயாளுகளாக சிகிச்சை பெற்று வீடு திரும்பியுளளனர். 19 பேர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்,மேலும் ராஜிவ்காந்தி மருத்துவமனையில் ஒருவரும், தனியார் மருத்துவமனையில் இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குடிநீர் ஆலந்தூரில் உள்ள மணல்மேடு பகுதிகளில் இருந்து இவர்களுக்கு விநியோகிக்கபடுகிறது,குடிநீரால் பாதிப்பு இருக்குமா என்ற வகையில் தற்போது குடிநீர் மாதிரிகள் கிங்ஸ் இன்ஸ்டியூட் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கபட்டுள்ளது. குறிப்பாக குடிநீர் மாதிரி பரிசோதனை முடிவு வருவதற்கு இரண்டு மூன்று நாட்கள் ஆகும் இருந்தாலும் பிரச்சினை தீவிரத்தை கருத்தில் கொண்டு மிக விரைவில் பறிசோதனை முடிவுகளை தர வலியுறுத்தி இருக்கிறோம்.
88 வயதான வரலட்சுமி என்பவர் சில நாட்களாக உடல் நலம் பாதிக்கபட்டு இறந்துள்ளார். திருவேதி,மோகனராஜ் ஆகிய இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு வரும் வழியில் இறந்துள்ளனர். இவர்களின் இறப்பிற்கான காரணம் பிரேத பரிசோதனை முடிவில் தெரிய வரும்.
எதிர்கட்சி தலைவர் பொதுவாகவே எந்த விஷயத்தை எடுத்தாலும் பதட்டத்தை ஏற்படுத்தும் வகையில் செய்திகளை சொல்வதும் தொடர்ந்து பதட்டமான சூழ்நிலையை உருவாக்குவதுமான செய்திகளை பதிவிடுவதுமே வாடிக்கையாக கொண்டு இருக்கிறார் என்று குற்றம்சாட்டினார்.
மழை பாதிப்பிலிருந்து மக்களை பாதுகாப்பதில் திமுக அரசு தோல்விகண்டுள்ளது – ராமதாஸ் குற்றச்சாட்டு